சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மெரினாவில் மீண்டும் வெடிக்கும் புரட்சி.. இளம் பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஜல்லிக்கட்டு போராட்டம் என பல விஷயங்களில் இளைஞர்களை ஒன்று திரட்டிய மெரினா கடற்கரையில் தற்போது மீண்டும் புரட்சி வெடித்துள்ளது. சென்னையில் இருப்பவர்கள் வார இறுதி நாட்களை மெரினா கடற்கரையில் தான் அதிக நேரத்தை செலவிடுவார்கள்.

அப்படித்தான் மெரினா கடற்கரையை சுற்றி பார்த்துவிட்டு வேளச்சேரி பறக்கும் ரயிலில் திருவான்மியூருக்கு சென்று கொண்டிருந்த இளம் பெண் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: விக்ரம் வெற்றியை போல் அடுத்த வெற்றிக்காக சரணடைந்த கமல்.. கிழித்து தொங்கவிட்ட சவுக்கு பிரபலம்

மெரினா கடற்கரையை சுற்றிலும் ஏகப்பட்ட தெருவோரக்கடைகள் இருக்கிறது. இதனால் பீச்சுக்கு வருபவர்கள் அங்கிருக்கும் உணவுகளை வாங்கி சாப்பிடுவதில் விருப்பம் காட்டுகின்றனர். ஆனால் அவையெல்லாம் தரமான உணவுகளா? என்பது சந்தேகம்தான். இந்நிலையில் கடலூரை சேர்ந்த மோனிஷா தனது நண்பர்களுடன் மெரினா கடற்கரையை சுற்றி பார்த்துவிட்டு அங்குள்ள கடைகளில் பானிபூரி, சுண்டல், சோளம் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

மெரினாவை சுற்றி பார்த்து முடிந்த பின்னர், சென்னை பீச் முதல் வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயிலில் ஏறி திருவான்மியூருக்கு நண்பர்களுடன் சேர்ந்து பயணித்திருக்கிறார். ரயில் மயிலாப்பூர் நிலையம் அருகே வந்தபோது திடீரென்று வாந்தி எடுத்த மோனிஷா மயங்கி விழுந்துள்ளார்.

Also Read: ஜல்லிக்கட்டுக்காக ஆண்டவர் எடுத்துள்ள முடிவு.. மொத்த தமிழ்நாடு திரும்பி பார்க்க வைக்கும் சம்பவம்

இதனால் பதறி அடித்த மோனிஷாவின் நண்பர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மோனிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக கூறினர். சமீப காலமாகவே மெரினா கடற்கரையில் சாப்பிடும் உணவினால் பாதிக்கப்பட்டு, இளம் வயதினர் உயிரிழப்பது தொடர்ந்து நிகழ்கிறது.

இதனால் சோசியல் மீடியாவில் மோனிஷாவின் இறப்பினால் பலரும் வெகுண்டெழுந்துள்ளனர். முன்பு எப்படி ஜல்லிக்கட்டை தடை செய்த போது, மெரினாவில் திரண்டு இளைஞர்கள் போராட்டம் நடத்தினார்களோ. அதேபோன்று இப்போது மறுபடியும் மெரினாவில் இருக்கக்கூடிய கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வழுத்து வருகிறது.

Also Read: ரத்தமும் சதையுமாக ஜல்லிக்கட்டு வரலாறு.. வெற்றிமாறனின் பேட்டைக்காளி வெப் சீரிஸ் விமர்சனம்

- Advertisement -

Trending News