புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

லோகேஷ்க்கு பின் இணையும் பிரம்மாண்ட கூட்டணி.. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் தளபதி 68

தளபதி விஜய் வாரிசு படத்தை முடித்த கையோடு லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இவர்களது கூட்டணியில் ஏற்கனவே வெளியான மாஸ்டர் படம் வேற லெவலில் ஹிட் ஆனது. மீண்டும் இவர்கள் கூட்டணியில் படம் உருவாவதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து தளபதி 68 படத்திற்கான அப்டேட்டும் தற்போது வெளியாகி உள்ளது. இன்னும் வாரிசு படமே வெளியாகாத நிலையில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் புக் ஆகியுள்ளார் விஜய். மேலும் தளபதி 68 படத்தை விஜயின் ஆஸ்தான இயக்குனர் தான் இயக்கப் போகிறார்.

Also Read : சினிமாவில் ஜெயிக்க அஜித், விஜய் செய்த சூழ்ச்சி.. பெரிய மீனை போட்டு சின்ன மீன்களை பிடிக்கும் தந்திரம்

அதாவது சமீபத்தில் இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா வளைகாப்பு நிகழ்ச்சியில் தளபதி விஜய் கலந்து கொண்டு அழகான ஓவியம் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார். விஜய் படு பிஸியாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அட்லீ விஜய்க்கு தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றி படத்தை கொடுத்துள்ளார். அந்த ஒரு மரியாதை மற்றும் நட்பின் காரணமாக விஜய் கலந்து கொண்டார் என்று கூறப்பட்டது. ஆனால் இதற்குப் பின்னால் வேறு ஒரு காரணம் இருக்கிறது.

Also Read : பிரியா அட்லீயை நேரில் வாழ்த்திய விஜய்.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்

அதாவது தளபதி 68 படத்தை அட்லீ தான் இயக்கவிருக்கிறார். இப்போது பாலிவுட்டில் ஜவான் படத்தை இயக்கி வரும் அட்லீ இந்தப் படத்தை முடித்த கையோடு விஜய் உடன் இணைய உள்ளார். மேலும் தளபதி 68 படத்தை சன் பிக்சர்ஸ் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது.

இதில் இயக்குனர் அட்லீயின் சம்பளம் மட்டும் கிட்டத்தட்ட 50 கோடியாம். மேலும் இந்தப் படத்தின் கையெழுத்து இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னரே முடிந்து விட்டதாம். மேலும் இந்த படத்திற்கான அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியாகும்.

Also Read : இந்த வருடம் ஏமாற்றத்தை தந்த 6 இயக்குனர்கள்.. ஒரே படத்தை பல வருடமாக உருட்டும் அட்லீ

- Advertisement -

Trending News