90களில் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அந்தக் கவர்ச்சி புயல். என்ன தான் இவர் கிளாமர் நடிகையாக இருந்தாலும் கவர்ச்சி மட்டுமல்லாமல் குணச்சித்திரம் மற்றும் காமெடி கேரக்டர்களிலும் கலக்கினார். ஆனால் திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்ட அந்த நடிகை 17 வருடத்திற்கு பின்பு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் பட வாய்ப்புகளை தேடும் பணியை தொடங்கியுள்ளார்.
இப்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ளும் இவர் சமீபத்திய பேட்டியில் பல விஷயங்களை உடைத்துப் பேசினார். தன்னுடைய முதல் படத்திலேயே கிளாமர் ஆக நடித்ததாகவும், தான் அந்த சமயத்தில் இயக்குனர் சொன்னதை தான் செய்ததாகவும் கேரக்டர் பற்றி எதுவும் அந்த சமயத்தில் தெரியவில்லை. என்னைவிட 15 வயது மூத்த நடிகர்களுடன் கவர்ச்சியாக நடித்திருப்பது இப்போது பார்க்கும்போது முகம் சுளிக்க வைக்கிறது.
Also Read: வெடவெடன்னு இருந்ததால் பறிபோன வாய்ப்பு.. வெளிநாடு போய் மப்பும் மந்தாரமுமாக திரும்பிய நடிகை
அந்த சமயத்தில் முதிர்ச்சி அடையாமல் இருந்திருக்கிறேன். முன்பே இதைப் பற்றி தெரிந்திருந்தால் அந்த கேரக்டரில் நடித்திருக்க மாட்டேன். இதன் மூலம் எப்போதுமே கிளாமர் வேடங்களே கிடைத்தது. மேலும் கிளாமருக்கு ஏற்றார் போல் தன்னுடைய உடல் அமைப்பு, எடை மற்றும் உருவம் இருப்பதால் திரையுலகம் அதை பயன்படுத்திக் கொண்டது.
அதன் பின் ஏன் கவர்ச்சியான கேரக்டரில் நடித்தீர்கள் என்ற கேள்விக்கு, ‘தற்போது கோலிவுட்டின் டாப் நடிகையாக இருக்கக்கூடிய நம்பர் நடிகை வெப் சீரிஸில் படுக்கையறை மற்றும் லிப்லாக் காட்சிகளில் எல்லை மீறி நடித்து வருகிறார். அவர் செஞ்சா தப்பு இல்ல, நா செஞ்சா தப்பா! அவர் செய்வது கிளாமராக இல்லையா? பிறகு ஏன் என்னை மட்டும் இப்படி முத்திரை குத்துகிறீர்கள் என்று ஆவேசப்பட்டார்.
இது தன்னுடைய உணர்வு பூர்வமான நடிப்பு, தான் அதில் நடித்ததாகவும் இன்றைய தலைமுறை அப்படி இல்லை. எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறார்கள், அதற்கு தைரியம் வேண்டும். இப்போதிருக்கும் இளம் நடிகைகள் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை துணிச்சலுடன் வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர்.