Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இப்போது தனத்திற்கு கேன்சர் இருப்பது ஐஸ்வர்யா மூலமாக ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தெரிந்து விட்டது. ஆரம்பத்தில் இதை நினைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் நொறுங்கி போனாலும் அதன் பிறகு இதற்கான தீர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தனத்தை தங்கத்தட்டில் வைத்து பார்த்து கொண்டு வருகிறார்கள். இரவு குழந்தை அழும்போதும் மூர்த்தி தனத்தை தூங்க சொல்லிவிட்டு தானே பார்த்துக் கொள்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தனது தம்பிகள் இடமும் இனி நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு அடிக்கடி வரமாட்டேன் என்று கூறுகிறார்.
ஏனென்றால் தனத்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தம்பிகளும் இனி அண்ணி பக்கத்திலேயே இருந்து நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் நாங்கள் கடையை பாத்துக்குறோம் என்று கூறுகிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் தனம் எண்ணெயில் செய்த பொருட்களை அதிகம் சாப்பிடக்கூடாது.
இனி அதுபோன்ற உணவுகளை தனத்திற்கு கொடுக்க வேண்டாம் என மூர்த்தி கூறுகிறார். அதற்கு ஐஸ்வர்யா இனிமேல் தனம் அக்கா சாப்பிட கூடாத உணவுகளை நாமும் சாப்பிட வேண்டாம். ஆகையால் இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப வீட்டில் எண்ணெயில் செய்த எந்த பொருட்களையும் சாப்பிட கூடாது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
Also Read : விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் சாதனை படைத்த நெல்சன்.. பிக் பாஸால் கூட உடைக்க முடியாத டிஆர்பி தெரியுமா?
இதனால் தனம் என்ன சாப்பிடுகிறாரோ அதே சாப்பாடு தான் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். இதை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் தனம் கண்ணீர் வடிக்கிறார். இப்படி ஒட்டுமொத்த குடும்பமும் பாசம் வைத்திருப்பதால் சீக்கிரம் தனத்தை அந்த நோயிலிருந்து குணமாக்கி விடும்.
இந்த புரோமோவை பார்த்த ரசிகர்கள் என்ன தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை உருட்டி வந்தாலும் பாசம் என்றால் இவர்களை அடித்து கொள்ள ஆளே இல்லை என்று கூறி வருகிறார்கள். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு பூசணிக்காய் உடைக்க இருக்கிறார்கள்.
Also Read : கல்யாணம் முடிந்த கையுடன் முடிவுக்கு வரும் சீரியல்.. விஜய் டிவியின் மொத்த டிஆர்பிக்கும் சங்கு ஊதிட்டாங்க!