Vijay Tv: சன் டிவியில் எதிர்நீச்சல் தொடரால் விஜய் டிவியின் டிஆர்பி பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது வீட்டில் இருக்கும் பெண்கள் தன்னம்பிக்கையால் எப்படி முன்னேற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. பெரும்பாலான ரசிகர்களின் விருப்ப தொடராக இப்போது இந்த தொடர் இருந்து வருகிறது.
ஆரம்பத்தில் விஜய் டிவி தொடர்கள் அதிக ரேட்டிங் பெற்று வந்த நிலையில் எதிர்நீச்சலால் இப்போது மந்தமடைந்துள்ளது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் தங்களது டிஆர்பியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பக்கா பிளான் போட்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது விஜய் டிவியின் சில தொடர்களால் ஓரளவு டிஆர்பி பெற்று வருகிறது.
Also Read : கடவுள் இருந்தா எதுக்கு நாட்டுல இவ்ளோ கெட்டது நடக்குது.. கமல் போல் நாத்திகம் பேசும் எதிர்நீச்சல் குணசேகரன்
ஆனால் திடீரென சூப்பர் ஹிட் சீரியலை முடிவுக்கு கொண்டு வர இருக்கின்றனர். அதாவது கடந்த சில வருடங்களாக ரசிகர்களின் ஃபேவரட் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது காற்றுக்கென்ன வேலி. சூர்யா மற்றும் வெண்ணிலா இருவரின் காதல் கதையாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு அமோக வரவேற்பு இருந்து வருகிறது.
பல தடைகளை மீறி இப்போது தான் சூர்யா, வெண்ணிலா இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் இனி வரும் காட்சிகள் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கல்யாணம் முடிந்த கையோடு காற்றுக்கென்ன வேலி தொடர் முடிவுக்கு வர இருக்கிறது.
Also Read : சாரு பாலாவை ரூட்டு விடும்போது மட்டும் இனிச்சுதோ.. பொண்டாட்டிய பொண்ணு கேட்டதால் கதறிய குணசேகரன்
இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. மேலும் விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் முடிவுக்கு வர இருக்கிறது. இவ்வாறு சூப்பர் ஹிட் சீரியல்கள் அடுத்தடுத்து விஜய் டிவியில் முடிவுக்கு வருவது சன் டிவிக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
மேலும் இதனால் விஜய் டிவியின் மொத்த டிஆர்பிக்கும் சங்கு ஊதுவது போல் தான் இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் முதல் வாரத்தில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதால் விஜய் டிவி இந்த திடீர் முடிவை எடுத்து உள்ளார்கள். ஆனால் ரசிகர்கள் காற்றுக்கென்ன வேலி தொடருக்கு பதிலாக வேறு ஏதாவது சீரியலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம் என்ற கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.