கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்க்கு பதில் நடிக்க வேண்டியது இந்த பிரபல நடிகர்தானாம்.. ஏன் திடீர்னு விலகினார் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகராக விளங்கியவர் தான் நடிகர் பிரசாந்த். அதுமட்டுமில்லாமல் 90களின் சாக்லேட் பாய் என்ற புகழும் இவருக்கு உண்டு. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

மேலும் நடிகர் பிரசாந்த் தமிழில் வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயனாக கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், திரையுலகில் முக்கியமான இடத்தை பெற்று, உச்சத்தில் மின்னிக்கொண்டிருந்த நடிகர் பிரசாந்த், தொடர்ந்து பல தோல்வி படங்களை கொடுத்தாலும் அவரது ரசிகர்கள் விடுவதாக இல்லை.

இதற்கு மிக முக்கிய காரணம் நடிகர் பிரசாந்தின் ஒரு ஆசை தான் என்று நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி  ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அந்த பேட்டியில் ரங்கநாதன் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்தில், அஜித் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது பிரசாந்த் தான் என்று கூறியதோடு, பிரசாந்த் ஏன் அந்த படத்தில் நடிக்கவில்லை என்பதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார்.

Ajith-Prasanth
Ajith-Prasanth

அதாவது பிரசாந்த், ‘நடிச்சா ஒரு ஹீரோ படத்தில் தான் நடிப்பேன், இல்லனா மம்முட்டி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியா நடிப்பேன்’ என்று கூறினாராம். இதனால் தான் பிரசாந்த் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

எனவே, இவ்வாறு தனது சிறு ஆசையால் அஜீத்துக்கும் விஜய்க்கும் இணையாக மின்னிக் கொண்டிருக்க வேண்டிய பிரசாந்த், தற்போது ஒரு வெற்றியை தேடும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்