விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் சாதனை படைத்த நெல்சன்.. பிக் பாஸால் கூட உடைக்க முடியாத டிஆர்பி தெரியுமா?

Vijay Tv Nelson: தற்போது நெல்சன் சாதனை எந்த அளவிற்கு உச்சத்தை தொட்டிருக்கிறது என்பதை ஜெயிலர் படத்தின் வசூலை வைத்தும் தீர்மானிக்க முடிகிறது. கிட்டத்தட்ட 600 கோடிக்கு மேல் லாபத்தை பெற்றிருக்கிறது. அந்த வகையில் பெரிய தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் கவனம் இப்போது நெல்சன் மேல் திரும்பி விட்டது.

அப்படிப்பட்ட இவர் இயக்குனராக மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை அடைந்து விட்டார். இவரிடம் ஏதோ மிகப் பெரிய திறமை இருக்கிறது என்று ரஜினி சரியாக கணித்து பயன்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம். அதே மாதிரி நெல்சன் இயக்குனராக அவதரிப்பதற்கு முன் விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் எக்ஸ்கேடிவ் தயாரிப்பாளராக இருந்திருக்கிறார்.

Also read: 4 கார்களை ஆப்சனாக கொடுத்த கலாநிதி.. இதுதான் ஜாக்பாட் என கூச்சப்படாமல் வாங்கிய நெல்சன்

அதே நேரத்தில் வல்லவன் படத்தின் வசனத்திற்கும் நிறைய உதவி பண்ணி இருக்கிறார். ஏனென்றால் நெல்சன் மற்றும் சிம்புவும் நெருங்கிய நண்பர்கள். அந்த நேரத்தில் தான் விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோ ஆரம்பிக்கப்பட்டது. அப்பொழுது இதை எப்படியாவது பெரிசாக கொண்டு போக வேண்டும் என்று நெல்சன் ரொம்பவே மெனக்கீடு செய்திருக்கிறார்.

அந்த நேரத்தில் சன் டிவி மிக உச்ச கட்டத்தில் நம்பர் ஒன் டிஆர்பி ரேட்டிங்கில் இருந்தது. அதனால் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் பொழுது ஏதாவது வெடிக்கும் அளவிற்கு ஒரு சர்ச்சையான விஷயத்தை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று நெல்சன் யோசித்து இருக்கிறார். இதற்காக சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது.

Also read: ஜெயிலரை விட டபுள் மடங்கு நெல்சன் வாங்க போகும் சம்பளம்.. ஃபெவிக்கால் போட்டு ஒட்டிய சன் பிக்சர்ஸ்

அதாவது டான்ஸ் போட்டியாளர்களாக பங்கு பெற்ற பப்புலுவை வைத்து ஒரு சர்ச்சையை வெடிக்க வைக்கலாம் என்று இவர்களாக யோசித்து முடிவு செய்து இருக்கிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரி சிம்புவிடமும் பேசி சம்மதம் வாங்கி விட்டார் நெல்சன். அப்பொழுது டான்ஸ் நடக்கும்பொழுது பப்புலுவை நிப்பாட்டி, சிம்பு பேசிய விஷயங்கள் பூதாகரமாக வெடித்தது.

கோபத்தில் இரண்டு பேரும் மேடையை விட்டு வெளியே போவது, வாக்குவாதத்தில் ஈடுபட்டது என்று பரபரப்பை ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ச்சியை கொண்டு போனார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே இந்த ஒரு ஷோ தான் இப்பொழுது வரை டிஆர்பி ரேட்டிங் 27 புள்ளியை அதிகரித்துக் கொடுத்திருக்கிறது. இன்னும் சொல்ல போனால் பிக் பாஸால் கூட இந்த டிஆர்பி ரேட்டிங்கை உடைக்க முடியவில்லை. அந்த அளவிற்கு நெல்சன் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியை டாப்புக்கு கொண்டு கொண்டு போய் சாதனை படைத்திருக்கிறார்.

Also read: ஜெயிலர் வெற்றியால் அடுத்தடுத்து நெல்சன் கூட்டணியில் உருவாகும் 5 படங்கள்.. தலைசுற்ற வைக்கும் சன் பிக்சர்ஸ் பட்ஜெட்

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -