சூடு பிடித்த லியோ வெளிநாட்டு வியாபாரம்.. மாஸ்டரை காட்டிலும் 4 மடங்கு அதிக பிசினஸ்

லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவாகி வருகிறது லியோ படம். முன்பு எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்களை லோகேஷ் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.

தளபதி விஜய்க்கு மட்டும் தான் தமிழ் சினிமாவைப் போல வெளிநாட்டுகளிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதனால் விஜய்யின் முந்தைய படங்கள் வெளிநாட்டு உரிமம் அதிகம் விற்கப்பட்ட வருகிறது. இந்நிலையில் விஜய்யின் கேரியரில் அதிக வெளிநாட்டு உரிமம் விற்கப்பட்ட படமாக லியோ படம் உள்ளது.

அதுவும் ஏற்கனவே விஜய், லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தை காட்டிலும் 4 மடங்கு அதிகமாக பிசினஸாகி உள்ளது. அதாவது மாஸ்டர் படம் தொடங்கும் போது 33.6 கோடிக்கு டீல் பேசப்பட்டது. ஆனால் மாஸ்டர் படம் வெளியாகும் போது கோவிட் தொற்று அதிகமாக இருந்தது. அது மட்டும்இன்றி திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

அதன் விளைவாக அப்போது மாஸ்டர் படத்தின் வெளிநாட்டு உரிமம் 15 கோடிக்கு மட்டுமே பிசினஸ் ஆனது. இதைத்தொடர்ந்து விஜய்யின் பிகில் படம் 30 கோடி, அடுத்ததாக பீஸ்ட் படம் 32 கோடி மற்றும் கடைசியாக வெளியான வாரிசு படம் 35 கோடி என விஜய்யின் வெளிநாட்டு பிசினஸ் கிராஃப் ஏற்றத்தில் சென்று கொண்டிருந்தது.

இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தின் ஓவர்சீஸ் பிசினஸ் சூடு பிடித்துள்ளது. அதாவது மாஸ்டர் படம் 15 கோடி வியாபாரமான நிலையில் அதை விட 4 மடங்கு அதிகமாக லியோ படம் வியாபாரமாகி உள்ளது. ரிலீசுக்கு முன்பே கிட்டத்தட்ட 60 கோடி ப்ரீ பிசினஸ் செய்துள்ளது.

விஜய்யின் திரை வாழ்க்கையில் அதிக வெளிநாட்டு உரிமைக்கு விற்கப்பட்ட படமாக லியோ படம் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஓவர்சீஸில் விஜய் தான் கெத்து என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் லியோ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்