68வது தேசிய விருதை தட்டி சென்ற சூர்யாவின் மிரட்டல் கூட்டணி.. ஜெயிச்சிட்டோம் மாறா!

ஒரு சிறந்த கலைஞனை பாராட்டை தாண்டி பெருமைப்படுத்துவது விருது மட்டும் தான். அதிலும் தேசிய விருது மிக உயரிய விருதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அசுரன் படத்திற்காக தனுஷ், வெற்றிமாறன் ஆகியோர் விருதினைப் பெற்றிருந்தனர். இதனால் இந்த வருடம் எந்த படம் தேர்வாகும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.

மேலும் கோவிட் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் பெரும்பாலும் ஓடிடி தளத்தில் அதிக படங்கள் வெளியானது. அந்த வகையில் சுதா கொங்கரா, சூர்யா கூட்டணியில் வெளியாகி சர்வதேச அங்கீகாரம் கிடைத்த சூரரைப்போற்று படம் 68-வது தேசிய விருதை தட்டிச் சென்றுள்ளது.

ஏர்டெக்கான் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்கிவருகிறார். மேலும் இப்படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க, அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்கான விருதை இதே படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளியும் பெற்றிருக்கின்றனர். மேலும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற பிரிவில் சுதா கொங்கராவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

மேலும் இப்படத்தில் பின்னணி இசையமைத்த ஜிவி பிரகாஷ் தேசிய விருதை பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த படம் சூரரைப்போற்று என தேர்வாகியுள்ளது. இவ்வாறு 64ஆவது தேசிய விருதினை சூர்யாவின் மிரட்டலான கூட்டணி வென்றுள்ளது. இதை அறிந்த சூர்யா ரசிகர்கள் ஜெயிச்சிட்டோம் மாறா என ஆர்ப்பரிக்கின்றனர்.

சூர்யாவின் திரை வாழ்க்கையில் இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைய உள்ளது. அதாவது சூர்யா திரைத்துறைக்கு வந்து பல வருடங்கள் ஆகியும் முதல் முறையாக விக்ரம் படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்று இருந்தார். தற்போது தேசிய விருது விழாவில் சூர்யாவின் படம் 5 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. தற்போது அவருடைய வளர்ச்சி தமிழ் சினிமா கொண்டாடும் விதமாக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்