விக்ரம் படத்தின் முதல் நாள் வசூல்.. ஆட்டம் கண்ட தல, தளபதி படங்கள்!

கமலஹாசன்-லோகேஷ் கூட்டணியில் உருவான விக்ரம் திரைப்படம் ஜூன் 3-ம் தேதி உலகெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆனது. கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் 120 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட விக்ரம் படத்தின் முதல் நாள் வசூல் சாதனை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிறது.

உலகெங்கும் 5,000 மேற்பட்ட திரையரங்கில் திரையிடப்பட்ட விக்ரம், தமிழகத்தில் மட்டும் 800-க்கும் அதிகமான தியேட்டர்களில் முதல்நாளில் மட்டும் ரிலீஸ் ஆனது. அப்போது தமிழகத்தில் 1708 காட்சிகளாக விக்ரம் படம் திரையிடப்பட்ட அன்றைய தினத்தில் பிற்பகல் 4 மணி வரையில் மட்டும் 7.95 கோடி வசூலை 70% பார்வையாளர்களுடன் வசூல் சாதனை குவித்திருக்கிறது.

இப்படி முதல் நாளிலேயே வசூலான விக்ரம் படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தின் வசூலை அசால்டாக ஓரம்கட்டி உள்ளது. அதுமட்டுமின்றி தல, தளபதியின் நடிப்பில் வெளியான பீஸ்ட், வலிமை திரைப்படத்திற்கும் இதே நிலைதான்.

சென்னையில் மட்டும் முதல்நாளில் விக்ரம் படம் 1.71 கோடி வசூலைக் குவித்திருக்கிறது. ஆனால் வலிமை 1.82 கோடியும், பீஸ்ட் 1.96 கோடியும், அண்ணாத்த 1.71 கோடியும் வசூல் சாதனை செய்திருக்கிறது. இப்படி முதல் நாளில் விக்ரம் படத்தின் வசூல் நிலவரம் இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் அண்ணாத்த படத்தின் வசூலை முந்தி விட்டது.

அத்துடன் பான் இந்தியா திரைப்படமாக ரிலீசான விக்ரம் படம், தமிழகத்தில் மட்டுமல்லாமல் கன்னடத் திரையுலகிலும் முதல் நாளில் 1.76 கோடியை 493 காட்சிகளில் 45% பார்வையாளர்களுடன் வசூல் சாதனை செய்திருக்கிறது. உலகில் முதல் நாளில் விக்ரம் வசூல் வேட்டையாடி உள்ளது.

இப்படி திரை அரங்கையே வசூலில் அடித்து நொறுக்கி கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படம் அசால்ட்டாக 500 கோடி வசூலை வெகு சீக்கிரமாகவே எட்டிவிடும் திரைத்துறையினர் கணித்துள்ளனர். அதற்கேற்றாற்போல் நான்கு வருடங்களுக்குப் பின் கமலஹாசனின் திரையில் பார்த்த ரசிகர்கள் திரையரங்கை நோக்கி படையெடுக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்