12 நாளில் பீஸ்ட் செய்த மிகப்பெரிய சாதனை.. தப்பு தப்பா சொன்னாலும் தளபதி தான் டாப்பு

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜயின் 65-வது படமான பீஸ்ட் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டு தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் ரிலீஸான அடுத்த நாளே ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் 2 ரிலீஸ் ஆனது.

இதனால் நிச்சயம் பீஸ்ட் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என பலரும் விமர்சித்தனர். ஆனால் பீஸ்ட் அவர்களது மூக்கை உடைக்கும் அளவுக்கு நெட் கலெக்சன் மட்டும் வெறும் 12 நாட்களில் 220 கோடி வசூல் செய்திருக்கிறது.

மேலும் பீஸ்ட், தல அஜித்தின் வலிமை படத்தின் கலெக்ஷன் 164.5 கோடியை முறியடித்திருக்கிறது. இதேபோன்றே சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தின் நெட் கலெக்ஷன் 52.8 கோடியையும், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்ஐஆர் படத்தின் நெட் கலெக்ஷன் 10.8 கோடியையும் முறியடித்திருக்கிறது.

அத்துடன் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் குடும்பத்தோடு ரசிக்கும் வகையில் இருப்பதால் உருவாக்கப்பட்டதால் தற்போது வசூல் வேட்டை செய்து வருகிறது. ஆகையால் 2022 ஆண்டிற்கான டாப் 4 மூவி நெட் கலெக்ஷன் லிஸ்டில் பீஸ்ட் முதலிடத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கிறது.

என்னதான் பீஸ்ட் படத்தை குறித்து நெகட்டிவ் கமெண்ட் சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருந்தாலும் வசூலில் தளபதி விஜய் படத்திற்குத் தான் எப்போதுமே கொடி கட்டிப் பறக்கும்.

ஏனெனில் பீஸ்ட் படத்தின் கதை நன்றாக இருக்கிறதோ இல்லையோ விஜய் காட்டும் மாஸுக்காகவே இந்தப் படம் போதும் என்பதே சினிமா விமர்சகர்களின் கருத்தாக இருப்பதுடன் தளபதி விஜய் கோலிவுட்டின் வசூல் ராஜா, தப்பு தப்பா சொன்னாலும் தளபதி தான் டாப்பு என்றே புகழப்படுகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்