கதை பிடிக்காமல் நடித்துக் கொடுத்த ரஜினி.. வாழ்நாளில் மறக்க முடியாமல் கிடைத்த பாராட்டு

ஒரு மொழியில் வெளியாகும் படங்கள் வெற்றி அடைந்தால் அதனை மற்றொரு மொழியில் ரீமேக் செய்யவது வழக்கம். தற்போது அனைவரும் எல்லா மொழி படங்களும் பார்ப்பதால், ரிமேக் ஆகும் படங்களின் எண்ணிக்கை சற்று குறைந்தாலும், முன்பெல்லாம் ரீமேக் படங்கள் மூலமே வெற்றி கொடி நாட்டிய நடிகர்கள் பலர் உள்ளனர்.

ரஜினி வளர்ந்து வந்த காலத்தில் அமிதாப் படங்களை பெரும்பாலும் தமிழில் ரீமேக் செய்தார். தமிழ் மொழி மட்டும் இன்றி வேறு மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வந்து கொண்டிருந்தார். அவ்வாறான காலத்தில் அவருக்கு “ஹம்” என்னும் ஹிந்தி படத்தில் அமிதாபுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் அமிதாபிற்கு தம்பியாகவும் ஒரு போலீஸ் கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகிய ரஜினிக்கு அது ஒரு நல்ல விதமான கேரக்டர் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் படம் ஷூட்டிங்கில் தன் கதாபாத்திரம் கொஞ்ச எதிர்மறையான கேரக்டராக இருப்பதை உணர்ந்துள்ளார்.

இருப்பினும் தனக்கு அமிதாப் மீது இருந்த அபிமானதால் படத்தை எந்த கேள்வியும் கேட்காமல் முடித்து கொடுத்துள்ளார். ஹிந்தியில் 1991ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. இதனுடைய தமிழ் ரீமேகில் ரஜினி நடிப்பில் 1995ஆம் ஆண்டு சிறு சிறு மாறுதல்களுடன் நடித்து பாட்ஷா என வெளிவந்தது.

இந்த படம் ரஜினியின் படங்களில் மிக பெரிய வெற்றி அடைந்த படங்களில் ஒன்றாக மாறியது. பாட்ஷா படத்தை பார்த்த அமிதாப் ரஜினியை காண அவருடைய வீற்றிக்கே சென்றுள்ளார். ரஜினி அப்போது வீட்டில் இல்லாததால் காத்திருந்து ரஜினி வந்தவுடன் அவரை கட்டி பிடித்து மனதார பாராட்டி சென்றுள்ளார்.

பின்நாளில், பாட்ஷா படத்தை பற்றி கூறும் போது ரஜினி நடந்த விஷயங்களை தன்னால் மறக்க முடியாது எனவும், அமிதாப் தன்னை பாராட்டியது தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் எனவும் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்