எம்ஜிஅர்-ஆல் 5 வருடங்கள் நடிக்க முடியாமல் போன நடிகை.. வெளிவந்த உண்மை

அந்தக்கால சினிமாவில் இப்போது இருக்கும் நடிகைகள் போல் எல்லாம் அந்த கால நடிகைகள் இருக்க முடியாது. இப்போது இருக்கும் நடிகைகள் சொல்வதை தான் தயாரிப்பாளர் முதல் இயக்குனர் வரை கேட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் அப்படி எல்லாம் இருக்க முடியாது.

ஒரு நடிகை திரைப்படங்களில் நடிக்க வந்துவிட்டால் குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து வருடம் வரை ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே படங்கள் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து விடுவார்கள். இதனால் அந்த நடிகைகளுக்கு சொற்ப படங்கள் மட்டுமே கைவசம் இருக்கும்.

இதனால் பல நடிகைகளுக்கும் படவாய்ப்புகள் சரிவர அமையாமல் இருந்தது. ஆனாலும் அவர்கள் இந்த விதிமுறையை மீறியது கிடையாது. தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் சொல்படிதான் அவர்கள் கேட்டு நடந்து கொள்வார்கள். அப்போதுதான் அவர்களால் சினிமாவில் முன்னேற முடியும்.

இப்படி ஒரு நிலையில் பல பட வாய்ப்புகளை இழந்தவர் தான் நடிகை லதா. இவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படங்கள் அனைத்தும் அன்றைய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் இவர்கள் இருவரின் ஜோடிப் பொருத்தமும் அபாரம் என்று புகழ்ந்த பலரும் உண்டு.

ஆனால் இப்படி ஒரு ஒப்பந்தம் போட்டதால் தான் லதாவால் சினிமாவில் இன்னும் உயரத்திற்குச் செல்ல முடியாமல் போய் விட்டதாக அப்போது பல கருத்துக்கள் வெளிவந்தது. ஒருவேளை இப்படி ஒரு ஒப்பந்தம் இல்லாமல் இருந்தால் இன்னும் பெரிய நடிகையாக வளர்ந்து இருப்பார். அதோடு பல சாதனைகளையும் புரிந்து இருப்பார் என்று பல பேச்சுகள் அப்போது அடிபட்டது.

இது ஒருவகையில் உண்மை என்று கூட சொல்லலாம். ஆனால் இந்த விதிமுறையை எம்ஜிஆர் முழுவதுமாக கடைப்பிடிக்கவில்லை. அவர் லதாவிடம் நீங்கள் இங்கே படப்பிடிப்புக்கு பாதிப்பு வராத மாதிரி வேறு படங்களில் நடித்து கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையாக கூறினாராம். பிறகு லதா மற்ற நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்