முதல்வரிடம் வாய்விட்டு மாட்டிய ராஜமவுலி.. பாகுபலியால், ஆர்ஆர்ஆர் ரிலீஸ்க்கு வந்த சோதனை

தெலுங்கு சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ராஜமவுலி. அவரின் இயக்கத்தில் தற்போது ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படம் மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோருடன் ஆலியா பட், அஜய் தேவ்கன் போன்ற  பாலிவுட் நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் ஜனவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் ஓமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் காரணத்தால் அனைத்து மாநிலங்களிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து தியேட்டர்கள் மூடப்படும் நிலையில் இருந்து வருகிறது.

இவ்வாறு ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீட்டுக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இயக்குனர் ராஜமௌலி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து இது குறித்து பேசியுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியும், ராஜமௌலியை வரவேற்று நட்பின் அடிப்படையில் பேசியுள்ளார்.

மேலும் அவரின் இயக்கத்தில் வெளியான படங்களின் சாதனைகள் குறித்து பேசிய ஜெகன் மோகன் ரெட்டி உலக சாதனை படைத்த பாகுபலி படத்தின் வசூல் சாதனை குறித்து கேட்டுள்ளார். அவர் என்ன அர்த்தத்தில் வசூலைப் பற்றி கேட்கிறார் என்று தெரியாமல் ராஜமௌலி படத்தின் மொத்த வசூல் பற்றிய உண்மையான நிலவரத்தை புட்டு புட்டு வைத்து விட்டாராம்.

தற்போது பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் எல்லாம் நூறு கோடி வரை வசூல் சாதனை படைத்து வருகிறது. ஒரு சில திரைப்படங்கள் அதிக வசூலை பெற்றிருந்தாலும் குறைவாக வசூலானது போல் காட்டப்படும். இதற்கு முக்கிய காரணம் வருமான வரி மட்டுமே. அதனால்தான் ஜகன் மோகன் ரெட்டி ராஜ மௌலியிடம் வசூல் குறித்து பேசியுள்ளார்.

ஆனால் ராஜமவுலி அதைப் பற்றி யோசிக்காமல் படத்தின் உண்மையான வசூலை பற்றி அனைத்தையும் கூறியுள்ளார். அதைக் கேட்டபின் ஜெகன்மோகன் ரெட்டி இந்த படத்திற்கு சரியான வரி கட்டவில்லை என்றும் உங்களுக்கு இவ்வளவு லாபம் கிடைத்துள்ளது. ஆனால் அரசாங்கத்திற்கு நீங்கள் கட்டிய வரி மிகவும் குறைவு என்று ராஜமௌலியிடம் கிடுக்கிப் பிடி பிடித்துள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி ராஜமவுலி மழுப்பியவாறு மீட்டிங்கை முடித்துவிட்டு கிளம்பியுள்ளார்.

தற்போது எடுக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பிரமோஷன் செலவு மட்டும் 20 கோடி வரை செலவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்தின் பிரச்சனையை பற்றி பேசப் போய் தற்போது ராஜமௌலி வேறு ஒரு சிக்கலில் மாட்டி உள்ளார். தவளை தன் வாயால் கெடும் என்பது தான் தற்போது இயக்குனரின் நிலையாக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்