பிரம்மாண்ட சீரியலில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ்.. கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கு

தமிழ் சினிமாவில் ஒரு நாள் ஒரு கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சங்கத்தமிழன், திமிரு பிடிச்சவன், டிக் டிக் டிக் , பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நிவேதா பல படங்களை துணிச்சலான கதாப்பாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். நிஜ வாழ்க்கையிலும் துணிச்சலானவர் என நிரூபிக்கும் விதமாக ஃபார்முலா ரேஸ் கார் ரேஸ் பயிற்சி முடித்துள்ளார்.

நிவேதா ஆரம்பத்தில் மாடலிங் துறையில் மிஸ் இந்தியா யுஏஇ பட்டத்தையும் வென்றுள்ளார். அதன்பிறகு சின்னத்திரை நாடகத்தில் நடித்து இருந்தார். நிவேதா சின்னத்திரை தொடரில் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

nivetha pethuraj
nivetha pethuraj

அதில் நந்தினி கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் பிடித்துப்போக பொன்னியின் செல்வன் தொடரில் நடிக்க ஆரம்பித்தார். மாடலிங்கில் ஒரே மாதிரி டிரெஸ் பண்ணுவது போஸ் கொடுப்பது என்று இருந்த நிவேதாவுக்கு இந்தக் கதாபாத்திரம் மிகவும் பிடித்துப்போனது. ஆனால், ஒரு சில காரணத்தால் அந்த ப்ராஜெக்ட் பாதியிலேயே நின்றுவிட்டதாம்.

ஆனால் இந்த சீரியல் வெளியாகியிருந்தால் நிவேதா பெத்துராஜ் முதலில் சின்னத்திரையில் தான் அறிமுகமாகி இருப்பார். இப்போது வெள்ளித்திரையில் படித்து வரும் பல நடிகர்கள் ஆரம்ப காலத்தில் சின்னத்திரையில் தான் நடித்துள்ளனர். தற்போது அந்த வரிசையில் நிவேதா பெத்துராஜ் இடம்பிடித்துள்ளார்

ஆனால் இந்தத் தொடர் வெளியாகியிருந்தால் இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறிதான். நிவேதிதா தற்போது வெள்ளித்திரையில் பல படங்கள் நடித்து ஜொலிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது நிவேதா பொன் மாணிக்கவேல், பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்