தற்கொலைக்கு முயன்ற தயாரிப்பாளர்.. மிகப் பெரிய ரிஸ்க் எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்த கௌதம் மேனன்

கடந்த 2006ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் க்ரைம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக வெளிவந்த வேட்டையாடு விளையாடு திரைப்படமானது மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. ஏனென்றால் இந்தப் படம் உலகம் முழுவதும் 500 மில்லியன் வசூலை ஈட்டியது. அதுமட்டுமல்லாமல் சென்னையில் மட்டும் சுமார் 16 திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது.

இந்தப் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி கமல், ஜோதிகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் முதல் முதலாக கமல் படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் துவங்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே படத்தின் தயாரிப்பாளரான காஜா மொஹிதீன் தற்கொலை செய்ய முயற்சித்தாராம். இதற்கு காரணம் அவருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியாம். இதையறிந்த கமல் படத்தில் இருந்து விலக நினைத்ததால் கௌதம் வாசுதேவ் மேனன் கமலை சமாதனம் செய்து படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

அதன் பிறகு படத்தின் தயாரிப்பை ஏற்க முன்வந்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் படம் துவங்கிய 15 நாட்களிலேயே படத்திலிருந்து விலகியுள்ளார். அதன்பின் கௌதம் வாசுதேவ் மேனன் தனது சொந்தப் பணம் 80 லட்சம் ரூபாயை வேட்டையாடு விளையாடு படத்திற்காக முதலீடு செய்து மும்பையில் படப்பிடிப்பு நடத்தி உள்ளார்.

இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் நியூயார்க் நகரிலேயே படமாக்கப்பட்டது. இதே சமயத்தில்தான் கௌதம் மேனன் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தையும் இயக்கிக் கொண்டிருந்தார்.

gautham menon kamal haasan
gautham menon kamal haasan

இத்தனை சோதனைகளுக்கு இடையிலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மனம் தளராமல் சூப்பர் ஹிட் படமான வேட்டையாடு விளையாடு படத்தை பிரமாதமாக இயக்கியது பாராட்டுக்குரிய விஷயம் தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்