பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு இப்படி ஒரு ஆசையா.? நிறைவேறாமல் போன சோகம்!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்றால் அனைவரின் நினைவிற்கும் வருவது இயக்குனர் ஷங்கர் மட்டுமே. ஏனென்றால் இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரான படங்கள். அதேசமயம் இவரது படங்கள் எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக உள்ளதோ அதே அளவிற்கு அப்படத்தில் ஏதேனும் ஒரு சமூக கருத்தும் இடம் பெற்றிருக்கும்.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படம் லஞ்சத்தையும், அந்நியன் படம் அலட்சியத்தையும், ஜென்டில்மேன் மற்றும் சிவாஜி படங்கள் ஏழை மக்களின் கல்வியையும் பேசியது. அத்தோடு படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னணி இயக்குனரான ஷங்கர் அந்நியன் ஹிந்தி ரீமேக், இந்தியன் 2 ஆகிய படங்கள் மூலம் சில பிரச்சனைகளை சந்தித்த நிலையில், தற்போது ஒருவழியாக அதிலிருந்து விடுபட்டு தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகவுள்ளது.

ஆரம்ப காலத்தில் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவியாளராக பணியாற்றிய சங்கர், அவருடன் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் வேறு சிலரிடம் வேலை செய்து ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குனரானார்.

shankar-cinemapettai-01
shankar-cinemapettai-01

ஆனால் ஷங்கருக்கு படம் இயக்குவதை விட சினிமாவில் எப்படியாவது ஒரு காமெடி நடிகராக வேண்டும் என்கிற ஆசை தான் இருந்துள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் ஷங்கர் நடித்திருந்தாலும் முழு நீள காமெடி நடிகராக வேண்டும் என்ற அவரது ஆசை தற்போது வரை நிறைவேறவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்