மலையாளத்தில் ஃப்ளாப்பான மம்முட்டியின் “ஒன்” பட தமிழ் டிரைலர்.. அங்கேயே ஓடல இங்க மட்டும் எப்படி குருநாதா!

கேரள முதல்வர் பினராய் விஜயன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி நடிகர் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து பாராட்டை பெற்ற படம் ஒன். தற்போது இப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது. முன்னதாக இப்படத்தின் தமிழ் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி சிறப்பான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ஆந்திர முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவான யாத்ரா படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கேரள முதல்வர் பினராய் விஜயன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி சந்தோஷ் விஸ்வநாதன் இயக்கத்தில் உருவான ஒன் திரைப்படத்தில் மம்முட்டி நடித்து இருந்தார். இப்படத்தில் ஸ்ரீனிவாசன், ஜோஜூ ஜார்ஜ், உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், நெட்ப்ளக்சில் படம் வெளியாகி கேரள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுதது தற்போது இதன் தமிழ் வெர்ஷன் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.

தற்போது தமிழ் படத்தின் டிரைலர் மட்டும் வெளியாகியுள்ளது மலையாளப்படத்தின் தமிழ் டப்பிங் என்றாலும் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்