கிளைமாக்ஸ மாத்துங்கப்பா என சண்டை போட்டு மாற்றப்பட்ட படங்கள்.. ஆனா அந்த படங்களோட முடிவு என்னாச்சி பாருங்க

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு பல தரப்பட்ட ரசிகர்களும் உள்ளனர். ஒரு சில நடிகர்கள் அடி வாங்கிக் கொண்டால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் விஜய் மற்றும் அஜீத் போன்ற நடிகர்கள் மற்றவர்களிடம் அடி வாங்குவது போல் காட்சிகள் அமைத்தால் ரசிகர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதற்காக பல இயக்குனர்களும் கதையை மாற்றி உள்ளனர் .

அந்த மாதிரி அன்றைய  காலத்திலிருந்து சமீபத்தில் வெளியான படங்கள் வரை பல நடிகர்களுக்காக
கதையை மாற்றியுள்ளனர். எந்தெந்த  படங்களில் எந்தெந்த நடிகர்களுக்காக கதையை மாற்றி உள்ளார்கள் என்பதை பார்ப்போம் .

பிரியமுடன்: விஜய் நடிப்பில் வெளியான பிரியமுடன் படத்தில் முதலில் விஜய் மற்றும் கவுசல்யா தப்பித்து செல்வது போல எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கதையை வைத்துள்ளனர்.

ஆனால் அப்படத்தின் இயக்குனருக்கு இதை பிடிக்காததால் விஜய்யை இப்படத்தில் இறப்பது போல் கிளைமாக்ஸ் காட்சியை வைத்தார். படம் தோல்வியை தழுவியது.

வசந்த மாளிகை: வசந்த மாளிகை திரைப்படம் சிவாஜி வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம். இப்படத்தின் முதல் பாகத்திலேயே சிவாஜி இறந்து விடுவது போல் காட்சிகள் அமைத்துள்ளன. ஆனால் அன்றைய காலத்தில் சிவாஜி மிகப்பெரிய நடிகர் என்பதால் ரசிகர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அது மட்டுமில்லாமல் பெரிய அளவில் பிரச்சினை வரும் என பயந்து, அப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி  மருத்துவமனையிலிருந்து பிழைப்பது போல் மாற்றி அமைத்துள்ளன. படம் மிகப்பெரிய வெற்றி.

கிரீடம்: 2007ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் திரைப்படத்தில் கிளைமாக்ஸில் அஜித்திற்கு போலீஸ் வேலை கிடைக்காது என்பதுபோல கதையை எழுதி உள்ளனர். பிறகு இறுதியில் மன்னிப்பு கேட்டு போலீஸ் வேலை கிடைப்பது போல் மாற்றி உள்ளனர். ஆனால் படம் சுமாராக மட்டும்தான் ஓடியது.

கல்லூரி: கல்லூரி படத்தில் முதலில் நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதுபோல் காட்சியை எடுத்துள்ளனர். பிறகு உண்மையான நீதி மன்றம் இப்படி இருக்காது என்பதால் அப்படத்திலிருந்து இந்த காட்சியை முழுவதுமாக நீக்கியுள்ளனர். படம் சுமாராக ஓடியது.

மின்சார கனவு: மின்சார கனவு திரைப்படம் பிரபுதேவா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி  படம். இப்படத்தில் கன்னியாஸ்திரியாக இருந்த கஜோல் திருமணம் செய்வதாக  படத்தில் காட்சியை அமைத்துள்ளனர்.

பின்பு இயக்குனர் இரண்டாவது கிளைமாக்ஸ் ஆக அரவிந்த் சாமியை கன்னியாஸ்திரியாக அமைத்து பிரபுதேவா மற்றும் கஜோலை திருமணம் செய்து வைப்பதாக காட்சி  அமைத்துள்ளனர். படம் மிகப்பெரிய தோல்வி.

முகவரி: முகவரி படத்தில் அஜித் முதலில் இசையமைப்பாளராக மாற மாட்டார். பின்பு ஜோதிகாவை கல்யாணம் பண்ணிப்பார் ஆனால் இது ரசிகர்கள் பிடிக்காது என்பதால் இயக்குனர் இந்த காட்சி அமைப்பை அப்படியே மாற்றி விட்டார். படம் சுமாராக ஓடியது.

ரௌத்திரம் பழகு: இப்படத்தில் ஸ்ரேயாவை கொடூர வில்லன்கள் கடத்திச்சென்று கொல்லுவது போல் காட்சியை முடிவு செய்துள்ளனர். பின்பு ஜீவா தப்பித்துச் செல்வது போல் காட்சி அமைத்து படத்தை முடித்துள்ளனர். படம் தோல்வி.

சுப்பிரமணியபுரம்: இப்படத்தில் சமுத்திரக்கனி சுவாதியை கடைசியாக கொள்வது போல் காட்சி அமைக்க திட்டமிட்டுள்ளனர். பின்பு இதனை முற்றிலுமாக மறுத்து  கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியுள்ளனர். படம் மிகபெரிய வெற்றி பெற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்