புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

300 நாட்கள் ஓடிய 7 நடிகர்களின் படங்கள்.. இந்த லிஸ்டில் ரஜினி, கமல் கூட இல்லை

7 films that ran in theaters for 300 days: இப்போது வெளியாகும் படங்களின் வசூலை தான் ஆகா ஓகோன்னு பேசுகிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் ஒரு படம் எத்தனை நாள் திரையரங்கில் ஓடுகிறது என்பதை வைத்துதான் அதன் வெற்றியை தீர்மானிப்பார்கள். அந்த வகையில் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் 300 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடிய ஏழு படங்களில் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் இந்த லிஸ்டில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் கூட இல்லை.

சிந்தாமணி: 40களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் தான் நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதர். இவர் நடித்த சிந்தாமணி என்ற படம் திரையரங்குகளில் 300 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இந்த படம் பில்வமங்கல் என்ற சமஸ்கிருத கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதால், அந்த காலத்தில் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது.

ஹரிதாஸ்: தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ஹரிதாஸ் என்ற படம், அந்தக் காலத்தில் 10 லட்சம் ரூபாய் வசூலை வாரிக்குவித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. இந்தப் படத்தில் தாய் தந்தையரை தெய்வமாக வணங்கி போற்ற வேண்டும் என்பதை ஆணித்தனமாக வலியுறுத்தினர். இந்தப் படம் 425 நாட்கள் வரை திரையரங்கில் தொடர்ச்சியாக ஓடி வெற்றி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பிகாபதி: தியாகராஜ பாகவதருக்கு பிறகு தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்தவர்கள் தான் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன். இதில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான அம்பிகாபதி என்ற படம் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 300 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. இதில் அரசவைக் கவிஞரின் மகனாக அம்பிகாபதி கேரக்டரில் சிவாஜியும், அரசனின் மகளாக அமராவதி கேரக்டரில் பானுமதியும் நடித்தனர்.

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். ஆனால் இவர்களின் காதலுக்கு அரசன் ஒத்துக் கொள்ளாததால் அம்பிகாபதி நம்பிக்கையுடன் அரசன் சவால் விட்ட போட்டியில் ஜெயிக்க பார்ப்பார். ஆனால் அம்பிகாபதி அந்த போட்டியில் தோற்றதால் கடைசியில் கொல்லப்படுகிறார். துக்கம் தாங்காமல் அமராவதியும் இறந்து விடுகிறார், அவர்களின் ஆன்மாக்கள் சொர்க்கத்தில் ஒன்றிணைகின்றன. உருக்கமான இந்த காதல் கதை பலரையும் திரையரங்கில் கண்ணீர் வடிக்க வைத்தது.

Also Read: போண்டா மணி காமெடியில் கலக்கிய 5 படங்கள்.. மாப்பிள்ளையை ஜோக்கர் ஆக்கிய வடிவேலு

300 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடிய 7 படங்கள்

பயணங்கள் முடிவதில்லை: மோகன்- பூர்ணிமா நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் பயணங்கள் முடிவதில்லை. இளையராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் இன்றும் இளசுகளின் பேவரைட் சாங் லிஸ்டில் இருக்கிறது. இதில் ரவி கேரக்டரில் நடித்த மோகன் தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருப்பார். பாடகர் ஆன அவரை ராதா கேரக்டரில் நடித்த பூர்ணிமா உருக உருக காதலித்தார். கடைசியில் இந்த காதல் ஜோடி எப்படி சேர்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை. உணர்வு பூர்வமான இந்த படம் திரையரங்கில் 300 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

பாலைவனச் சோலை: சுகாசினி கிராமத்து பெண்ணாக சந்திரசேகர், ஜனகராஜ், ராஜிவ் உள்ளிட்டோர் இணைந்து நடித்த படம் தான் பாலைவனச் சோலை. இதில் வெவ்வேறு சமூகப் பின்னணியை சேர்ந்த ஐந்து நண்பர்கள் தங்கள் சொந்த லட்சியங்களையும் பொறுப்புகளையும் கொண்டுள்ளனர். ஆனால் ஒரு அழகான பெண் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு செல்லும் போது அவர்களின் நட்பு எப்படி பிரிகிறது, கடைசியில் அந்த பெண் யாரை காதலிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்தப் படமும் 300 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது.

மண்வாசனை: பாரதிராஜா இயக்கத்தில் பாண்டியன், ரேவதி நடிப்பில் வெளியான கிராமத்து பின்னணி கதைகளை கொண்ட படம் தான் மண்வாசனை . படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப மண்கமலம் வீசும் வகையில் படம் முழுக்க கிராமத்து பின்னணியை தான் கதையாக்கினர். இதில் பாண்டியன், ரேவதி இருவரின் எதார்த்தமான நடிப்பு படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இந்த படம் மதுரை சுற்று வட்டார பகுதிகளில் 300 நாட்கள் வரை தியேட்டரில் ஓடி வசூலில் பட்டையைக் கிளப்பியது.

கரகாட்டக்காரன்: ராமராஜன், கனகா நடிப்பில் நகைச்சுவை காதல் படமாக வெளியான திரைப்படம் தான் கரகாட்டக்காரன். இதில் இரு கரகாட்டக்காரர்களின் காதலை மையப்படுத்தி கோர்வையான காமெடி படமாக கொடுத்தனர். இதில் கவுண்டமணி, செந்தில், கோவை சரளா மூன்று பேரும் சேர்ந்து படத்தில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு காமெடியில் பிச்சு உதறினர். இந்தப் படம் 375 நாட்கள் வரை திரையரங்கில் ஓடியது.

Also Read: 2023-ல் பிரச்சனையில் மாட்டிய 5 பிரபலங்கள்.. மேடையில் அடித்துக் கொண்ட காக்கா, கழுகு பஞ்சாயத்து

- Advertisement -

Trending News