1000 கோடியா, வாய்ப்பில்ல ராஜா.. 7 நாட்களில் லியோ வாரி குவித்த வசூல் இதுதான்

Leo 7 Days Collection Report: கடந்த வாரம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த லியோ முதல் நாளிலேயே கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அதிலும் இது லோகேஷ் படம் மாதிரி இல்லையே என்ற கருத்துக்கள் தான் அதிகமாக குவிந்தது. இது படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது மட்டுமல்லாமல் வசூல் பயத்தையும் காட்டியது.

இருந்தாலும் தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் என்பதால் படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாகவே ஓடியது. மேலும் பல பேர் டிக்கெட் கிடைக்காமல் திரும்பிய சம்பவமும் நடந்தது. அந்த வகையில் முதல் நாளிலேயே லியோ 148 கோடி வரை வசூலித்து பிரம்மிக்க வைத்தது. அதில் விஜய்க்கு மற்ற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அது மட்டுமின்றி கேரளாவில் பெரும்பாலான விஜய் ரசிகர்கள் இருக்கும் காரணத்தினாலேயே அங்கு வசூலும் சக்கை போடு போட்டது. அப்படி பார்த்தால் இந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 45 கோடி வரை கலெக்ஷன் ஆகி இருக்கிறது. அதேபோன்று கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் கணிசமான லாபம் கிட்டியுள்ளது.

ஆக மொத்தம் வெளி மாநிலங்களில் மட்டுமே 114 கோடி வரை வசூல் ஆகி இருக்கிறது. அந்த வகையில் லியோ ஆறாவது நாளில் 450 கோடிகளை தட்டி தூக்கி இருந்தது. அதைத்தொடர்ந்து ஏழாவது நாளான நேற்று திரையரங்குகளில் கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. தொடர் விடுமுறை நாட்கள் முடிந்தது தான் இதற்கு முக்கிய காரணம்.

இதனால் பகல் நேரங்களில் பல திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டது. அதன் காரணமாகவே லியோ நேற்று மொத்தமாக 12 கோடிகளை மட்டுமே வசூலித்திருக்கிறது. ஆக மொத்தம் இந்த ஏழு நாட்களில் இப்படம் 462 கோடி கலெக்ஷன் பார்த்துள்ளது. அந்த வகையில் லியோ 500 கோடியை நெருங்குவதற்கே தட்டு தடுமாறிக் கொண்டிருக்கிறது.

ஆனால் எப்படியும் இந்த வார இறுதியில் இதன் கலெக்ஷன் கணிசமாக உயரும் என்று கணிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் ஜெயிலர் வசூலை இது முறியடிக்குமா என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. இதுவே இப்படி என்றால் ஆயிரம் கோடி வசூல் எல்லாம் வாய்ப்பே இல்லை என்ற கருத்தும் இப்போது பரவிக் கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்