மூன்றே படங்களில் முக்காடு போட்ட 7 நடிகைகள்.. அழகு இருந்தும் நடிப்புல ஜீரோதான்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! இந்தக் கட்டுரையில் தமிழ் சினிமாவில் ஒன்று இரண்டு படங்களின் மூலம் பிரபலமாக அறிமுகமாகி பின்பு சீக்கிரமே காணாமல் போன நடிகைகளைப் பற்றி பார்க்கலாம். அழகும் திறமையும் நிறைந்து இருந்தபோதும் எந்த காரணத்தினாலோ தெரியவில்லை இவர்களால் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் அல்லது இந்திய சினிமாவில் நிலைத்திருக்க முடியாமல் போனது.

ரோஷினி : ரோஷினி என்று சொன்னால் பலருக்கும் ஞாபகம் வருவது கடினம் தான். அதேநேரம் அபிராமி என்று சொன்னால் பலருக்கும் ஞாபகம் வரலாம். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்தின் பெயர் நம் மனதில் நீங்காத இடம் பிடித்தது. கமல் ஹாசன் ரோஷினி இணைந்து நடித்த திரைப்படம் தான் குணா. இந்த திரைப்படத்தில் வசதியான வீட்டுப் பெண்ணை கடத்தி சென்று விடும் கதாபாத்திரத்தில் நடித்தார் கமல். ஆரம்பத்தில் கமலை வெறுத்து பின்பு அவர் காதலில் மயங்கி அவரை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அறிமுக நடிகையான ரோஷினி. மக்களுக்கு அந்த காலத்தில் அவ்வளவாகப் பிடிக்காத இந்த திரைப்படம் தோல்வியை தழுவிய காரணத்தாலோ என்னவோ தெரியவில்லை ரோஷினி அதன்பிறகு திரைப்படங்களில் பார்க்க இயலவில்லை.

gunaa
gunaa

மானு: தல அஜித் குமார் அவர்களுடன் மானு என்ற நடிகை காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். நாட்டிய கலைஞரான மானு மிகவும் அழகான தோற்றம் கொண்டவர். காதல் மன்னன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற பின்னும் மானு தொடர்ந்து சினிமாவில் நடிக்காமல் போனார். அதற்கு என்ன காரணம் என்று தெளிவாக தெரியவில்லை. நமக்கு நல்லதொரு அழகான நடிகை தொடர்ந்து நடிக்காமல் போனது துரதிர்ஷ்டமே.

ajith-maanu
ajith-maanu

நிஷா கோத்தாரி: இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளிவந்த ஜேஜே படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நிஷா கோத்தாரி என்னும் அமோகா. ஜே ஜே திரைப்படம் வெற்றி பெற்றபோதும் நிஷா வால் தொடர்ந்து முன்னிலை வகிக்க முடியவில்லை. கதாநாயகி வேடம் கிடைக்காத காரணத்தால் ஒன்றிரண்டு படங்களில் கவர்ச்சி நாயகியாக பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

ரிச்சா: நடிகை ரிச்சா வின் நிலைமை மிக சோகமானது. ஆரம்ப படங்களிலேயே தனுஷ் சிம்பு என்று நல்ல மார்க்கெட் உள்ள நடிகர்களுடன் தான் நடித்தார் ரிச்சா. ஆனபோதும் இவர் நடித்த மயக்கம் என்ன, ஒஸ்தி ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெறாத காரணத்தாலோ என்னவோ அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும் அவர் அதிர்ஷ்டம் இல்லாத நடிகை என்று ஒதுக்கப்பட்டார். தற்போது முற்றிலுமாக திரைப்படங்களிலிருந்து ஒதுங்கியவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

மீனாட்சி: கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தில் நடிகர் கரணுக்கு ஜோடியாக நடித்தவர் மீனாட்சி. ஓரளவுக்கு வசூலும் கவனமும் பெற்ற இந்த திரைப்படத்தின் மூலம் மீனாட்சி புகழ் பெற்றாலும் தொடர்ந்து அவரால் நல்ல படங்களில் நடிக்க இயலவில்லை. இதன் காரணமாக அடுத்த சில படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்தார். அதோடு அவரது திரைப் பயணம் ஏறக்குறைய முடிந்துவிட்டது.

ரீமாசென்: இந்த லிஸ்டில் ரீமாசென் சேர்த்திருப்பது கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் அவரது திரைப் பயணத்தை உற்று நோக்கினால் இதில் அவர் இருப்பது தவறு இல்லை என்பதே உண்மை. முதல் படமான மின்னலே மாபெரும் வெற்றி பெற்றபோதும் தொடர்ந்து ரீமாசென் எனக்கு நல்ல திரைப்படங்கள் கிடைக்கவில்லை. அவருக்கு கிடைத்தது என்னவோ இரண்டாம் நாயகியும் கவர்ச்சி நாயகி வேடம் தான். இதனால் தொடர்ந்து முன்னேற்றமான நிலைமையில் இல்லாத அவர் பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்தபோதும் நிலையான ஹீரோயின் என்ற அந்தஸ்துக்கு வர இயலவில்லை.

சமீரா ரெட்டி: வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் நெஞ்சங்களை அள்ளிக் கொண்டவர் நடிகை சமீரா ரெட்டி. இந்த படத்தை தவிர மேலும் ஒரு சில தமிழ் படங்களில் அவர் நடித்து இருந்தாலும் மற்ற படங்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இதன் காரணமாக அந்த படத்துடைய புகழுடன் நம் மனதில் நீங்காத இடம் பிடித்து தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது புகைப்படங்களை ஏற்றி தமிழ் நெஞ்சங்களை இன்புற செய்கிறார்.

Next Story

- Advertisement -