உறுதியாக இந்தியன் 2 ரிலீஸ் டேட் அறிவித்த படக்குழு.. ஜூலை பண்டிகை நாளை குறிவைத்த கமல்

Kamal
Kamal

இந்தியன் 2 ஆரம்பத்தில் ஜூன் மாதம் ரிலீஸ் செய்வதாக போஸ்டரில் அறிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் தேதியை குறிப்பிடவில்லை. தேதியை கமல் காலால் மறைப்பது போல் தான் அந்த போஸ்டர் ரிலீஸ் ஆனது. இப்பொழுதுஅந்த படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இன்னும் படத்தின் சூட்டிங் 10 நாட்கள் மீதம் இருக்கிறது. பெரும் பொருட் செலவில் எடுக்க போகும் ஒரு பாடல் மீதம் இருக்கிறது. அந்தப் பாடலுக்காக பணம் புரட்டும் வேளையில் லைக்கா சுபாஸ்கரன் இறங்கியுள்ளார். கிட்டதட்ட ஆறு கோடி முதல் எட்டு கோடி வரை அந்த பாடல் காட்சிகளுக்கு செலவாகுமாம்.

ஜூலை பண்டிகை நாளை குறிவைத்த கமல்

அது எடுத்து முடித்த பிறகு, போஸ்ட் புரோடக்சன் வேலைகள் வேற இருக்கிறது. எப்படி பார்த்தாலும் அதற்கு இரண்டு மாதங்கள் வரை எடுக்கும். ஆக மொத்தம் ஜூன் மாதம் ரிலீஸ் இல்லை. இப்பொழுது உறுதியாக படக்குழு ஒரு தேதியை அறிவித்து இருக்கிறது.

ஜூலை அரசாங்க விடுமுறையை குறிவைத்து வேலை செய்து வருகிறது. அதாவது ஜூலை 17 மொகரம் பண்டிகை வருகிறது. அந்த தேதியில் இப்பொழுது இந்தியன் 2 படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடுகின்றனர். சங்கர், கமல் படத்துக்கே விடுமுறை நாட்களை குறி வைப்பது பெரும் விந்தையாக இருக்கிறது.

மொகரம் பண்டிகை ஜூலை 17 புதன் கிழமை வருகிறது. அந்த வார இறுதி ஐந்து நாட்களை குறி வைத்து இந்த படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என திட்டம் போட்டுள்ளனர். அதற்குள் படத்தின் வேலைகளை எல்லாம் முடிக்க வேண்டும் என இந்தியன் 2 குழுவினர் பரபரப்பில் இருக்கின்றனர்.

Advertisement Amazon Prime Banner