Vijay: விஜய் ஒரு கோழை, 2026 களத்தில் செல்லாக்காசு.. வன்மத்தில் கொட்டி தீர்த்த பிரபலம்

Thalapathy Vijay: ‘ கோழி ஒரு முட்டையிட, ஊரெல்லாம் கொக்கரிக்கும்’ என்று சொல்வார்கள். அப்படித்தான் தளபதி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் களம் காண இருப்பதாக சொல்லிவிட்டு சைலன்டாக படப்பிடிப்புகளில் பிஸியாகிவிட்டார்.

அவர் கட்சியை பற்றி அவர் பேசுகிறாரோ இல்லையோ நாளுக்கு நாள் மற்றவர்கள் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதுவும் ஒரு வித ப்ரமோஷன் தான் என்று நினைத்துக் கொண்டு விஜய் இதை கண்டு கொள்வது இல்லை போல.

தமிழ்நாட்டில் டைம் மெஷின் ஏதாவது கொண்டு வந்து 2026 ஆம் ஆண்டு என்ன நடக்கும் என்பதை பார்த்து விட வேண்டும் என்பதுதான் தளபதி ரசிகர்களின் ஆசை. ஏற்கனவே அவர் நடித்துக் கொண்டிருக்கும் GOAT படத்தை மறந்து விட்டு அவருடைய கடைசி படத்தின் மீது எல்லோருடைய கண்களும் போய்விட்டது.

20 வருஷத்துக்கு முன்னாடி ரிலீசான கில்லி படம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படுகிறது. என்னதான் நடக்குது தமிழ்நாட்டுல, விஜய் கட்சி ஆரம்பிச்சதிலிருந்து எதுவும் சரி இல்லையே என எல்லாருக்கும் போடலாம்.

இது பற்றி யூடியூப் பிரபலம் ரவீந்தர் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் அவர் நடிகர் விஜயின் அரசியல் நகர்வை பற்றி தன்னுடைய சொந்த கணிப்பை சொல்லி இருக்கிறார். விஜய்க்கு இந்த 2024 ஆம் ஆண்டு தான் ரொம்பவும் சாதகமான ஒன்று.

இந்த வருஷம் அவர் தேர்தலில் நின்று இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுகவை எதிர்ப்பதற்கான சக்தி வாய்ந்த கட்சி என்று எதுவுமே இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் இது ராகுல் காந்திக்கு நடக்கும் தேர்தல் என்று நினைத்திருக்காமல், விஜய் போட்டி போட்டிருக்க வேண்டும்.

இது என்ன புழுகினி ஆட்டமா இருக்கு!

அதை விட்டுவிட்டு கட்சி ஆரம்பித்து லெட்டர் பேடில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் விஜய். அவருக்கு அரசியல் ஐடியா கொடுக்கும் நபர்களுக்கே அரசியல் தெரியாது. அதனால் தான் விஜய் இப்படி நடந்து கொள்கிறார். அது மட்டும் இல்லாமல் விஜயகாந்துக்கு இருக்கும் தைரியம் விஜய்க்கு கிடையாது.

தலைவா படத்தை முடக்கிய போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அப்படியே பணிந்து போய்விட்டார் விஜய். ஆனால் விஜயகாந்த் அப்படி கிடையாது, யாருக்கும் பணிந்து போக மாட்டார். விஜயின் சினிமா பேசப்படும் அளவுக்கு, அவருடைய அரசியல் கவனம் ஈர்க்கவில்லை.

அலையைப் பார்த்து பயப்படுறவன் எப்படி கடலில் நீச்சல் அடிக்க முடியும். விஜய் தைரியமாக இந்த லோக்சபா தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் மட்டும் விஜய் நிற்பார் என்பது எந்த விதத்திலும் உறுதியான விஷயம் இல்லை. அவருடைய அரசியலைப் பற்றி பேசுவதே முதலில் தவறு என சொல்லி இருக்கிறார் ரவீந்தர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்