Tamannaah : ஐட்டம் நடிகை என்ற பெயரை தவிடு பொடி ஆக்கிய சுந்தர் சி.. தமன்னாவின் மார்க்கெட்டை உயர்த்திய சம்பளம்

தமன்னா ஒரு காலத்தில் சினிமாவில் கோலோச்சி இருந்த நிலையில் சில காரணங்களினால் அக்கட தேசம் சென்று விட்டார். அங்கும் அவருக்கு சரியாக மார்க்கெட் கிடைக்காததால் வாய்ப்பு கிடைக்கும் படங்களில் நடித்து வந்தார். 

மீண்டும் தமன்னாவை தமிழ் சினிமாவில் ட்ரெண்டாக்கியது இயக்குனர் நெல்சன் தான். ஜெயிலர் படத்தில் தமன்னா சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும் காவாலா பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. அதில் அவர் போட்ட குத்தாட்டம் ஷார்ட்ஸ் வீடியோவாக ட்ரெண்டானது. 

ஆனாலும் ஐட்டம் நடிகை என்ற பெயர் தமன்னாவை தொற்றிக் கொண்டது. காரணம் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற பாடலிலும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். அதோடு பாலிவுடில் அவர் நடித்த லாஸ்ட் ஸ்டோரீஸ் இல் முகம் சுளிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. 

அரண்மனை 4 படத்தில் தமன்னா வாங்கிய சம்பளம்

ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்த தமன்னாவா இது என பலரும் வியப்பில் ஆழ்த்தி இருந்தனர். இந்த சூழலில் இப்போது அரண்மனை 4 படத்தில் தமன்னா நடித்திருக்கிறார். இந்த படத்தின் போஸ்டரிலும் தமன்னா கிளாமர் உடையில் தான் இருந்தார். ஆனால் ஒரு பாடலுக்காக மட்டுமே ராசி கன்னா மற்றும் தமன்னா இருவரும் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தனர். 

மேலும் தமன்னா மீது முத்திரை குத்தப்பட்ட ஐட்டம் நடிகை என்ற பெயரை சுந்தர் சி தவிடு பொடி ஆக்கிவிட்டார். அரண்மனை 4 மாபெரும் வெற்றி அடைவதற்கு தமன்னாவும் ஒரு முக்கிய காரணம். இந்த படத்திற்காக அவருக்கு 4 முதல் 5 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால் இப்போது தமன்னாவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் மீண்டும் உயர்ந்து இருக்கிறது. மீண்டும் பழையபடி பெரிய நடிகர்களின் படங்களில் தமன்னாவுக்கு வாய்ப்பு வருகிறதாம். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் விட்ட இடத்தை தமன்னா பிடிக்கலாம் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News