Connect with us
Cinemapettai

Cinemapettai

Entertainment | பொழுதுபோக்கு

ஒரே ஒரு ஹிட் படத்திற்காக போராடும் 6 நண்பர்கள்.. கண்டுக்காமல் கழட்டிவிட்ட ஜெய்யின் குரு

தமிழ் சினிமாவில் இணை பிரியாத நண்பர்களாக இருக்கும் 6 பேர் ஒரே ஒரு தரமான படத்தை கொடுப்பதற்காக இப்போது வரையிலும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

jai-1

கோலிவுட்டில் சிறந்த நண்பர்களாக இருக்கும் 6 நடிகர்கள் இப்போது வரை ஒரே ஒரு ஹிட் படத்தை கொடுப்பதற்காக படாத பாடு படுகின்றனர். அதிலும் ஜெய்யின் குரு இந்த 6 பேரையும் சினிமாவில் வளர்த்து விட்டு, இப்போது சுத்தமாகவே கண்டு கொள்ளாமல் கழட்டி விட்டுள்ளார்.

வைபவ்: தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஏ கோதண்டராமி ரெட்டியின் மகன் நடிகர் வைபவ் ரெட்டி. கோதண்டராம இயக்கத்தில் 2007 இல் வெளியான கோதவா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் வைபவ். அதன்பிறகு தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார். என்னதான் வைபவ் கதாநாயகனாக நடித்தாலும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்ற படங்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா போன்ற படங்களில் வைபவ் தன்னுடைய நண்பர்கள் உடன் இணைந்து நடித்து ஹிட் கொடுத்தார். இருப்பினும் இவரால் தனித்து நடித்து ஹிட் கொடுக்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்.

ஜெய்: சுப்ரமணியபுரம் படம் ஜெய்-க்கு மிகப்பெரிய பாராட்டை பெற்றுக் கொடுத்தது. சினிமாவில் ஜெய் முன்னணி நடிகராக ஜொலிப்பார் என்று நினைத்த நிலையில் தலை கனத்தால் நிலைத்து நிற்க முடியாமல் போய்விட்டது. தற்போது ஜெய் ஒரு ஹிட் படத்தை கொடுக்க போராடி வருகிறார். ஜெய் சினிமாவில் குருவாக இயக்குனர் வெங்கட் பிரபுவை நினைக்கிறார். ஏனென்றால் அவருடைய இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளியான சென்னை 600028, சரோஜா, கோவா போன்ற ஹிட் படங்களுக்கெல்லாம் வாய்ப்பு கொடுத்து அவரை தூக்கி விட்டவர். ஆனால் சமீப காலமாக வெங்கட் பிரபு ஜெய்யை சுத்தமாகவே கண்டு கொள்ளாமல் கழட்டிவிட்டார்.

Also Read: விளையாட்டை மையமாக வைத்து வெளியான டாப் 10 படங்கள்.. தேசிய விருதை அள்ளி குவித்த வெற்றிமாறனின் ஆடுகளம்

நித்தின் சத்தியா: வசூல் ராஜா எம்பிபிஎஸ், ட்ரீம்ஸ், ஜீ, தோழா,  சென்னை 28, சரோஜா, சத்தம் போடாதே, ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் நடித்திருக்கும் இவர், நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ளார். இருப்பினும் இவரால் முன்னணி நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியாமல் தற்போது வரை தவிர்த்துக் கொண்டிருக்கிறார்.

பிரேம்ஜி அமரன்: கங்கை அமரன் குடும்பத்தின் வாரிசு. நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல துறைகளிலும் தடம் பதித்தவர். 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருக்கிறார் பிரேம்ஜி. எதார்த்தமான தன்னுடைய காமெடி நடிப்பால் பலரையும் கவர்ந்தவர். இயக்குனர் வெங்கட் பிரபுவின் சொந்த தம்பி என்பதால் அவருடைய இயக்கத்தில் வெளியான சென்னை 600028, கோவா, மங்காத்தா போன்ற படங்களை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இருப்பினும் அவர் இப்போது வரை தனித்து ஏதாவது ஒரு படத்தில் நடித்து ஹிட் கொடுக்க வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார்.

Also Read: பத்து படங்களுக்கு மேல் பண்ணியாச்சு ஒரு ஹிட் கூட இல்ல.. வருத்தப்பட்டே வாழ்க்கையை ஓட்டும் 6 இளம் நடிகர்கள்

ஆகாஷ் அரவிந்த்: பிரபல சீரியல் நடிகரான இவர் வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்து பல படங்களை துணை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். அதிலும் இவருடைய நடிப்பில் வெளியான சென்னை 600028, இன்பா, சரோஜா, பஞ்சாமிர்தம், அ ஆ இ ஈ, கோவா, மங்காத்தா போன்ற படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. இருப்பினும் அவர் ஹீரோவாக நடிக்கக் கூடிய அத்தனை திறமைகள் இருந்தாலும் ஒரே ஒரு தரமான படத்தை கொடுக்க தற்போது வரை போராடிக் கொண்டிருக்கிறார்.

சிவா: ரேடியோ மிர்ச்சியில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றிய இவர், அதன் பிறகு காமெடி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். அதன் பிறகு வெங்கட் பிரபுவின் சென்னை 600028, சரோஜா போன்ற படங்களின் மூலம் மேலும் பிரபலமானார். அதன் பின் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அந்த படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்காததால் இப்போது வரை ஒரே ஒரு ஹிட் படத்தை கொடுப்பதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.

Also Read: பிரபல இயக்குனரால் திசை மாறிய வாழ்க்கை.. சண்முகசுந்தரத்தை இப்படி ஆக்கிட்டீங்களே!

இவர்கள் ஆறு பேரும் நல்ல நண்பர்கள் இவர்களுக்கு குருவாய் இருந்தவர் வெங்கட் பிரபு. இப்பொழுது அவர் இவர்களை கண்டுப்பதே இல்லை. இருப்பினும் இவர்கள் தனித்து போராடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் கிடைக்கக்கூடிய பட வாய்ப்புகளில் தங்களது திறமையான நடிப்பை வெளிக்காட்ட முயற்சி செய்கின்றனர். இருப்பினும் இவர்களால் இப்போது வரை ஒரு ஹிட் படத்தைக் கூட கொடுக்க முடியவில்லை.

Continue Reading
To Top