சுமார் 40 வருடத்திற்கு மேலும் சினிமாவை ஆட்டி படைத்த 6 நடிகர், நடிகைகள்.. எல்லாரையும் தூக்கி சாப்பிட்ட கமல்

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் நடித்து கலக்கிக் கொண்டிருக்கும் ஆறு நடிகர் நடிகைகளை பற்றி பார்ப்போம். அதில் உலகநாயகன் கமலஹாசன் தனது 68வது வயதிலும் இளம் நடிகர் நடிகைகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

ராதாரவி: எம்.ஆர் ராதா. அவர்களின் மகனான ராதாரவி 1980களில் ஒரு நாடக கம்பெனியை துவங்கி. ரகசிய ராத்திரி என்ற கன்னட படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை துவங்கினார். அதன் தொடர்ச்சியாக கமலின் அறிமுகத்தினால் கே. பாலச்சந்தரின் மன்மத லீலை என்ற படத்தின் மூலம் தமிழுக்கு முதல் முதலாக அறிமுகமானார். அதன்பின் டி ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா’ என்ற படத்தில் முதன்முதலாக வில்லனாக அவதாரம் எடுத்தார். அதன் பிறகு டாப் நடிகர்களான விஜயகாந்த், கமல், பிரபு, ரஜினி படங்களை குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் தன்னுடைய நடிப்பில் அசத்தியவர். இவர் 48 வருடங்களாக தமிழ் சினிமாவில் அனுபவம் வாய்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த்: தன்னுடைய 72வது வயதிலும் எனர்ஜி குறையாமல் இளம் நடிகர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு டாப் நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 169வது படமான ஜெயிலர் படத்தில்
நடித்து முடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்தை பார்ப்பதற்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இயக்குனர் கே பாலச்சந்தர் பெங்களூரில் கண்டக்டராக இருந்த ரஜினியின் ஸ்டைலை பார்த்து தமிழ் சினிமாவிற்கு 1975 ல் கமல் நடித்த அபூர்வராகங்கள் படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். அப்போது துவங்கிய அவரது பயணம் இப்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ரஜினி சுமார் 48 வருடங்களாக தமிழ் சினிமாவில் இருக்கிறார்.

Also Read: 50 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத ரஜினியின் தங்கை.. காதல் தோல்வியால் எடுத்த முடிவு

ராதிகா: பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதாவின் மகளான ராதிகா நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் ஆகவும் தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கிறார். இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் தனது சினிமா பயணத்தை பாரதிராஜா இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் துவங்கினார். அதன் பின் 80களில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த் போன்றவர்களுக்கு கதாநாயகியாக நடித்து ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார். டாப் நடிகர்களின் படங்களில் குணசத்திர வேடங்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் திரை உலகிற்கு வந்து 48 வருடம் ஆகிறது.

லட்சுமி: 1961 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீவள்ளி என்ற படத்தில் நடிப்பதன் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கிய நடிகை லட்சுமி, அதன் பிறகு 1968 ஆம் ஆண்டு ஜீவனாம்சம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு கன்னடம், மலையாளம் என பிறமொழி படங்களிலும் நடிக்க துவங்கிய லட்சுமி 70, 80 களில் முன்னணி நடிகையாக ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருந்தார். சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் லட்சுமி, அரசியலிலும் ஈடுபட்டார். இவரையும் அறிமுகப்படுத்திய பெருமை கே. பாலச்சந்தர் அவர்களுக்கே சேரும். லட்சுமி சுமார் 55 வருடங்களாக தமிழ் சினிமாவை தன்வசப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 35 வருடங்களாக பாரதிராஜாவிடமிருந்து ஒதுங்கி இருக்கும் ரஜினி.. ஒரு தடவை பட்டதே போதும்டா சாமி

கவுண்டமணி: கோலிவுட்டின் நகைச்சுவை நடிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கவுண்டமணி, செந்திலுடன் அடித்த லூட்டி கொஞ்சம் நஞ்சமல்ல. சுமார் இரண்டு தலைமுறை ரசிகர்களையும் சிரிக்க வைத்த கவுண்டமணியின் பேச்சும், உரையாடலும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனால் 80, 90களில் வெளியான படங்களில் கவுண்டமணி நிச்சயம் இடம்பெறுவார். இவர் சுமார் 450 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அதில் 10 படங்களில் கதாநாயகனாகவும் பிற படங்களில் வில்லன் குணச்சித்திர நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். கவுண்டமணி சுமார் 60 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர்.

கமலஹாசன்: 1960 ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், அந்தப் படத்தில் நடித்ததற்காகவே ஜனாதிபதி விருது பெற்றார். குழந்தை நட்சத்திரமாகவே 6 படங்களில் நடித்த கமலஹாசன், 1973 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் என்ற படத்தில் வாலிபனாக என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு தனது 25-வது படமான அபூர்வராகம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழுக்கான முதல் பிலிம்பேர் விருதை வென்றார்.

பிறகு அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து 4 முறை தேசிய விருதை வாங்கிய பெருமையைப் பெற்றார். இவ்வாறு தனது 4 வயதில் சினிமா பயணத்தை துவங்கிய கமல், தனது 68வது வயது வரை டாப் நடிகராக தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் கமல், தனது 233வது படத்தில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இவர் சுமார் 63 வருடங்களாக கோலிவுட்டை ஆட்டி படைக்கிறார்.

Also Read: கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகை.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கமலுடன் நடிக்க மாட்டேன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்