50 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத ரஜினியின் தங்கை.. காதல் தோல்வியால் எடுத்த முடிவு

Actor Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அதுமட்டுமின்றி ஜெய் பீம் இயக்குனருடன் புதிய படத்தில் கூட்டணி போட இருக்கிறார்.

இவ்வாறு தனது அடுத்த அடுத்த படங்களில் ரஜினி மிகவும் பிசியாக இருக்கிறார். இந்த சூழலில் ரஜினி படத்தில் நடித்த நடிகை ஒருவர் 50 வயதை கடந்தும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இவ்வாறு நடிகை திருமணத்தை வெறுக்க என்ன காரணம் என்று வெளியாகி இருக்கிறது.

Also Read : 80களில் ரஜினியுடன் நடிக்க போட்டி போட்ட 5 நண்பர்கள்.. எப்பொழுதுமே நாட்டாமையை விட்டுக் கொடுக்காத சூப்பர் ஸ்டார்

அதாவது ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் படையப்பா. இந்த படத்தில் சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இதில் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தவர் நடிகை சித்தாரா. கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த சித்தாரா புது புது அர்த்தங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து இவருக்கு கதாநாயகியாக அடுத்தடுத்த படங்கள் கிடைத்தது. மேலும் பல மொழி படங்களில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் சித்தாரா நடித்திருக்கிறார். இந்நிலையில் 50 வயதை கடந்தும் சித்தாரா திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு அவரது காதல் தோல்வி தான் காரணமாம்.

Also Read : நொண்டி குதிரைக்கு சறுக்கியதே சாக்கு.. ரஜினியால் வாழ்க்கை இழந்ததாக புலம்பும் நடிகை

அவர் ஒரு சமயத்தில் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது ஒருவரை காதலித்து உள்ளார். ஆனால் அந்த காதல் கைகூடவில்லை என்பதால் கல்யாணத்தின் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அவரது தந்தையின் இறப்பு அவரை நிலைகுலைய வைத்தது. இதனால் திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

மேலும் இப்போது அவருக்கு 50 வயது ஆன நிலையில் திருமணம் என்பது இனி என் வாழ்க்கையில் இல்லை என்று கூறியிருக்கிறார். அழகும், திறமையும் ஒரு சேர்ந்த சித்தாரா சொந்த வாழ்க்கையில் இவ்வாறு பல பிரச்சனைகளை சந்தித்து, தற்போதும் தனிமையில் இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read : சிம்புவைப் போல 90களில் ரஜினியை சுழற்றி அடித்த கெட்ட நேரம்.. தயாரிப்பாளர்கள் போட்ட முட்டுக்கட்டை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்