35 வருடங்களாக பாரதிராஜாவிடமிருந்து ஒதுங்கி இருக்கும் ரஜினி.. ஒரு தடவை பட்டதே போதும்டா சாமி

Director Bharathiraja: தமிழ் சினிமாவிற்கு பல முன்னணி நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவருடைய படங்கள் என்றாலே கிராமத்து மண்வாசனை மணக்கும் வகையில் படம் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இருக்கும். ஆனால் இவர் தன்னுடைய முதல் படமான 16 வயதினிலே படத்தில் பரட்டையாக நடித்த ரஜினியுடன் 10 வருடம் கழித்து மறுபடியும் இணைந்த படம் படு தோல்வியாக அமைந்தது.

இந்தப் படத்திற்குப் பிறகு ரஜினி அவருடன் இணைந்து பணியாற்றுவதை இன்று வரை தவிர்த்து வருகிறார். பாரதிராஜா ரஜினியை வைத்து ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கி உள்ளார். அந்தப் படமும் மோசமாய் ஃபெயிலியர் ஆனதால் இவர்கள் கூட்டணி தொடரவே இல்லை. பல ஹீரோ ஹீரோயின்களை வளர்த்துவிட்ட பாரதிராஜா, ரஜினிக்கு கொடுத்த அந்த ஒரு பெயிலியரால் அதன் பின் ரஜினியை இயக்கவில்லை.

Also Read: இயக்குனர் இமயம் படுமோசமாக இயக்கிய 6 படங்கள்.. பிரியாமணியை வைத்து கேவலமாக ஆடிய சைக்கோ ஆட்டம்

1988 ஆம் ஆண்டு ரஜினியை வைத்து பாரதிராஜா கதை எழுதி, இயக்கி, சொந்தமாக தயாரித்த படம் கொடி பறக்குது. பொதுவாக பாரதிராஜாவின் படத்தில் இருக்கும் கிராமத்து பின்னணி இந்த படத்தில் காணாமல் போனது.  இதனால் பாரதிராஜாவின் படம் என ஆசையாசையாய் ஓடி வந்தவர்களுக்கு இந்த படம் அதிரடி காட்சி படம் என்பதை பார்த்ததும், அவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதனால் திரையரங்கில் இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காமல் பயங்கர பிளாப் ஆனது. வசூலில் பயங்கர அடி வாங்கியது. ஆனால் இந்த படத்தில் ரஜினியுடன் அமலா, பாக்கியலட்சுமி, மணிவண்ணன், சுஜாதா, ஏஆர் சீனிவாசன், ஜனகராஜ், விஜயன், சங்கிலி முருகன், இளவரசு, சுதா, வினோத் ராஜ் உள்ளிட்ட ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.

Also Read: ஆபரேஷன் சக்சஸ் ஆனா நோயாளி செத்துட்டான்.. ஹிட்டான ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், படத்தை பிளாப்பாக்கிய 5 இயக்குனர்கள்

இதில் எதிர்மறை கேரக்டரில் நடித்த மணிவண்ணனுக்கு பாரதிராஜா தான் குரல் கொடுத்தார். இந்த படத்திற்கு பாரதிராஜா தன்னுடைய முழு உழைப்பை கொடுத்தாலும் ரஜினியுடன் இணைந்து ராசியோ என்னமோ தெரியவில்லை, இந்த படம் படு தோல்வி படமாக அமைந்தது.

இந்த படத்தை பாரதிராஜா தயாரித்ததால் அவருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அந்த நஷ்டத்தை ஈடுகட்ட மீண்டும் ஒரே ஒரு முறை தன்னுடைய படத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என அந்த சமயத்தில் நிறைய பேட்டிகளின் மூலம் பாரதிராஜா சூப்பர் ஸ்டாருக்கு வேண்டுகோள் வைத்தார். ஆனால் ரஜினி ஒருமுறை பட்டதே போதும்டா சாமி என 35 வருடங்களாக பாரதிராஜாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.

Also Read: பீடா கடையில் வேலை பார்த்து வந்த நடிகர்.. பாரதிராஜா படத்தில் நடித்தும், தோல்வி முகம் காட்டிய பரிதாபம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்