இன்று வரை அடிச்சுக்க முடியாத 5 சட்ட நாடக படங்கள்.. பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஆக வெளுத்து வாங்கிய சிவாஜி

5 Unbeatable Legal Drama Films Till Date in Tamil cinema like Sivaji’s Gouravam: சட்டத்தை மையமாகக் கொண்டு சாமானியனுக்கு நீதி வாங்கி கொடுக்கும் இந்த மாதிரியான திரைக்கதைகள் மூலம் மக்களுக்கு உணர்த்த வருவது ஒன்றே ஒன்றுதான் “வாய்மை வெல்லும்” என்பது மட்டுமே. இன்று வரை தமிழ் சினிமாவில் சட்டத்தை  முன்னிறுத்தி நீதி வாங்கி கொடுத்த 5 நாடக படங்களை காணலாம்

விதி: 1984 ஆண்டு கே விஜயன் இயக்கத்தில் வெளிவந்த விதி திரைப்படத்தில் மோகன், பூர்ணிமா, சுஜாதா, ஜெய்சங்கர் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏழைப் பெண்களின் வாழ்க்கையை பழிகடாவாக்கும் செல்வந்தனின், ஆண் ஆதிக்கத்திற்கு எதிராக பலமான சாட்டையடி கொடுத்த திரைப்படம் விதி. 

பாச பறவைகள்: மலையாள படத்தின் ரீமேக்கான திரைப்படத்தில் சிவக்குமார், மோகன், ராதிகா, லட்சுமி முதலானோர் நடித்திருந்தனர். தன் கணவனின் இறப்பிற்கு நீதி கேட்டும், தன் கணவனை தூக்கில் இருந்து காப்பாற்ற போராடுவதுமான இரு பெண்களின் சரிநிகர் வாதமே ஆகும். இதில் தர்மம் ஜெயித்து பாசம் வென்றதே பாசப்பறவைகள் ஆனது. 

Also read: சிவாஜி, மற்ற நடிகர்களுக்காக ஓடி ஓடி உழைத்த கேப்டன்.. மட்டமாக நடந்து கொண்ட தென்னிந்திய நடிகர் சங்கம்

கௌரவம்: நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா? என்று இரு வேறு வேடங்களில் சிவாஜி கணேசன்  தன் கௌரவத்தை நிலை நாட்ட தன் நடிப்பையும் மீறி பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஆக கதாபாத்திரத்தில் வாழ்ந்தார் என்றே சொல்லலாம். இனி இது போல் கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் சினிமாவில் ஆளே கிடையாது என்னும் அளவுக்கு வெளுத்து வாங்கி இருந்தார் சிவாஜி.

மௌனம் சம்மதம்: மம்முட்டி மற்றும் அமலா நடிப்பில் வெளிவந்த மௌனம் சம்மதம் திரைப்படத்தில் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பான திருப்பங்களுடன்  கொலையாளி யார் என்பதை சஸ்பென்ஸோடு இறுதிக்காட்சி வரை நகர்த்தி ரசிகர்களை இருக்கை நுனியில் உட்கார வைத்தார் இயக்குனர். மம்மூட்டி வாத திறமையால் குற்றவாளியை குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கும் முறை அருமையிலும் அருமை.

நீதிபதி: சிவாஜி, பிரபு, சுஜாதா,கே ஆர் விஜயா மற்றும் ராதிகா என தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்கள் நடித்திருந்து 1983இல் வெளியான திரைப்படம் நீதிபதி. கேங்ஸ்டர் ஸ்டோரியை மையமாக வைத்து பாவத்திற்கு தண்டனை வாங்கிக் கொடுப்பது  ஒரு புறமும் நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று ஒரு புறமும் தனது அசாத்திய நடிப்பால்  நீதிபதிக்கே உயிர் கொடுத்திருந்தார் சிவாஜி.

Also read: காலத்தில் சூழ்ச்சியால் காணாமல் போன 5 நட்சத்திரங்கள்.. சொல் புத்தி இல்லாமல் மார்க்கெட்டை இழந்த ஜீன்ஸ் ஹீரோ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்