அரசியல் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்த 5 படங்கள்.. கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடியில் சிக்கிய கமல்

பொதுவாக சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒரு சில காரணங்களால் ஒரு படம் அண்டை மாநிலங்களில், அண்டை நாடுகளில் தடை செய்யப்படும். ஆனால் ஒரு சில படங்கள் சொந்த இடத்திலேயே நிறைய அரசியல் காரணங்களால் ரிலீஸ் செய்வதற்கு தடைகள் கோரப்படும். இப்படி தமிழ் சினிமாவின் நிறைய முன்னணி ஹீரோக்களின் படங்கள் அரசியல் காரணங்களால் ரிலீசுக்கு முன்பு பல போராட்டங்களை சந்தித்து இருக்கின்றன.

இருவர் : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்த திரைப்படம் இருவர். இந்தப் படம் தமிழக அரசியலில் முக்கிய புள்ளிகளான எம்ஜிஆர் மற்றும் கருணாநிதிக்கு இடையேயான அரசியலைப் பற்றி ரொம்பவும் வெளிப்படையாக பேசி இருந்தது. இதனால் இந்த திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கியது.

Also Read: கமல் நிலைமை தான் விக்ரமுக்கும்.. ரிலீசுக்கு முன்பே அந்த படத்திற்கு வந்த மோசமான விமர்சனங்கள்

பாம்பே: 1993 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாம்பே. இந்து மற்றும் முஸ்லிம் மதத்தை சார்ந்தவர்களுக்கு இடையேயான காதல் மற்றும் திருமணத்தைப் பற்றி இந்த படம் பேசியிருந்ததால் அந்த சமயத்தில் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது. இயக்குனர் மணிரத்னம் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் கூட வீசப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்றார்.

ஹே ராம்: உலகநாயகன் கமலஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் ஹேராம். இந்தப் படம் ஆஸ்கார் நாமினேஷன் வரை சென்றிருந்தாலும் பல சர்ச்சைகளையும் சந்தித்தது. இந்தப் படத்தில் மகாத்மா காந்தியை தவறாக காட்டியிருக்கிறார்கள் என்று ஒரு தகவல் பரவ மிகப்பெரிய எதிர்ப்பு இந்தப் படத்திற்கு கிளம்பியது. மேலும் இந்தப் படத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் பற்றிய பகுதிகள் அவரே கேட்டுக் கொண்டதற்கு இணங்க நீக்கப்பட்டது.

Also Read: தடுமாற வைத்து வேடிக்கை பார்த்த அம்மையார்.. சூடு பிடிக்க களமிறங்கிய கமல்

விருமாண்டி: விருமாண்டி பட சர்ச்சையை தமிழ்நாட்டில் இருக்கும் யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. சண்டியர் என்ற பெயரிடப்பட்ட இந்தப் படத்திற்கு படத்தின் தலைப்பை மாற்றக்கோரி பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. இறுதியாக சண்டியர் என்ற பெயர் விருமாண்டி என மாற்றப்பட்டும் ஒரு சில அரசியல் காழ்ப்புணர்ச்சிகளால் படத்திற்கு ஏ சர்டிபிகேட் தான் வழங்கப்பட்டது.

கபாலி: இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் முழுக்க முழுக்க மலேசியாவை மைய்யமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. போதைப் பொருள் கடத்தல் சம்பந்தப்பட்ட படம் என்பதால் மலேசிய அரசு இந்தப் படத்திற்கு தடை விதித்தது. இதனால் மலேசியாவில் ரிலீஸ் ஆன இந்தப் படத்தில் நிறைய காட்சிகள் நீக்கப்பட்டன. மேலும் கிளைமாக்ஸ்சும் மாற்றப்பட்டது.

Also Read: புலிக்கு வாலாக இருப்பதை விட பூனைக்கு தலையாக இருக்கலாம்.. கமல் கூப்பிடும் வர மறுத்த ஜாம்பவான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்