விநியோகஸ்தர்கள் தலையில் துண்டை போட்ட 5 படங்கள்.. ரஜினிகாந்த் படத்துக்கு இந்த நிலைமையா?

பொதுவாகவே பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். படத்தின் கதை எப்படி இருந்தாலும் அந்த நடிகர்களின் ரசிகர்களே படத்தை ஓட வைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் அந்த படக்குழுவுக்கு இருக்கும். இதனாலேயே தயாரிப்பாளர்கள் டாப் நடிகர்களின் படங்களின் மேல் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி போடுவார்கள். விநியோகஸ்தர்களும் இரண்டு, மூன்று மடங்கு அதிக தொகை கொடுத்து வாங்கிவிடுவார்கள். இது சில நேரங்களில் அவர்களுக்கே சறுக்கலாகவும் அமைந்து விடுகிறது.

கோச்சடையான்: சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3D அனிமேஷன் திரைப்படம் ஆகும். இந்த படத்திற்கு திரைக்கதை, இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் எழுதியிருந்தார். ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 125 கோடி செலவில் இந்த படம் உருவாக்கப்பட்டது. நல்ல கதை இருந்தாலும் அனிமேஷன் திரைப்படமாக இருந்ததால் கோச்சடையான் பிளாப் ஆனது.

Also Read: எப்பவுமே கமல் தான் மாஸ், 10 வருஷத்துல ரஜினி எல்லாம் ஒண்ணுமே இல்ல.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

லிங்கா: ரஜினிகாந்த், சோனாக்சி சின்கா, அனுஷ்கா ஷெட்டி, சந்தானம், ராதாரவி, விஜயகுமார் ஆகியோர் நடித்து 2014 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் லிங்கா. இந்த படத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் ரஜினிக்கு தோல்விப்படமாக அமைந்தது.

கபாலி: இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் கபாலி. ராதிகா ஆப்தே, தன்சிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன், ஜான் விஜய் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்தியாவில் மட்டும் 3200 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. கலைப்புலி எஸ் தாணு தயாரித்த இந்த படம் தோல்வி அடைந்தது.

Also Read: அஜித்தை மந்திரிச்சி விட்ட ரஜினி.. மீண்டும் நடக்கப்போகும் சந்திப்பு

தர்பார்: இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் தர்பார். நயன்தாரா மற்றும் நிவேதா தாமஸ் நடித்த இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரித்திருந்தது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படம் ரிலீஸ் ஆனது. வணிக ரீதியாக மிகப்பெரிய நஷ்டத்தை தர்பார் படம் சந்தித்தது.

விவேகம்: இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்குமார் மற்றும் காஜல் அகர்வால் நடித்த திரைப்படம் விவேகம். இந்த படத்தில் அக்சரா ஹாசன் மற்றும் விவேக் ஓபராயும் நடித்திருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்ததோடு மிகப்பெரிய நஷ்டமும் ஆனது. விவேகம் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த ரிவியூ அப்போது சர்ச்சைக்குள்ளானது.

Also Read: புதுவிதமான பிரம்மாண்டத்தில் உருவாகும் பாபா.. இந்த காட்சியல்லாம் தூக்குங்க என கட்டளையிட்ட ரஜினி

- Advertisement -spot_img

Trending News