மலையாள நடிகைகளை உஷார் செய்த 5 நடிகர்கள்.. பாரதிராஜா வீட்டிற்கு மருமகளான கேரளத்து பைங்கிளி

பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்குள் காதல் வருவது என்பது இயல்பான ஒன்று. இதில் ஒரு சில ஜோடிகளை திருமணம் செய்து கொள்வார்கள். மலையாள நடிகைகள் என்றால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கே அவர்கள் மீது ஒரு க்ரஷ் ஏற்பட்டு விடும். அப்படி இருக்கும் பொழுது உடன் நடிக்கும் நடிகர்களும் அவர்களை காதலிப்பது என்பது சாதாரணமாக நடக்கும் விஷயம் தான். இதில் 5 தமிழ் ஹீரோக்கள் மலையாள நடிகைகளை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள்.

அஜித் – ஷாலினி: தமிழ் சினிமா உலகிற்கு பேபி ஷாலினியாக அறிமுகமானவர்தான் நடிகை ஷாலினி அஜித்குமார். 25க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்திருக்கிறார். மலையாள கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த ஷாலினி அமர்க்களம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also Read:கூச்சமே இல்லாமல் கவர்ச்சியில் தாராளம் காட்டிய 5 நடிகைகள்.. கிளாமரில் லேடி சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய ஆண்ட்ரியா

ரஞ்சித் – பிரியா ராமன்: தமிழில் வள்ளி மற்றும் சூரியவம்சம் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா ராமன். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி நாடகத்தின் அகிலாண்டேஸ்வரி என்னும் கேரக்டர் மூலம் மீண்டும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை இவர் தொடங்கினார். பிரபல நடிகர் ரஞ்சித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கௌதம் கார்த்திக் – மஞ்சிமா: நடிகை மஞ்சிமா மோகன் இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் வந்தது. தேவராட்டம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also Read: 2024-யை குறி வைத்திருக்கும் தளபதி.. லேடி சூப்பர் ஸ்டார் உடன் விஜய் போட்ட பிளான்

மனோஜ்- நந்தனா: கேரளாவின் கோழிக்கோடு பகுதியை பூர்வீகமாக கொண்ட நடிகை நந்தனா 2002 ஆம் ஆண்டு சினேகிதன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதில் இருந்து சில வருடங்களுக்கு தமிழ் மற்றும் மலையாள உலகின் புகழ்பெற்ற நடிகையாக விளங்கினார். சாதுரியன் படத்தில் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் குமார் உடன் இணைந்து நடிக்கும் பொழுது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

விக்னேஷ் சிவன்-நயன்தாரா: தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் என்னும் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அந்த படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார். விக்னேஷ் சிவனுக்கு கும்பகோணம் பூர்வீகம். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

Also Read:விஜய்க்காக ஐட்டம் டான்ஸ் ஆடிய 5 ஹீரோயின்கள்.. நடிகையாக நடிக்க முடியாத ஆதங்கத்தை தீர்த்த மீனா