கமலுக்கு ஹியூமர் ஸ்கிரிப்ட் எழுதிய 5 நடிகர்கள்.. உலக நாயகன் கைவிடாத காமெடி குழு

Kamal Haasan humour movies: 100 படங்களுக்கு மேல் தமிழில் மட்டும் இல்லாமல் பல பழமொழிகளில் நடித்து உலக நாயகனாக பீக்கில் இருப்பவர் கமல்ஹாசன். பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், நகைச்சுவை ஹீரோவாக அமர்க்களப்படுத்தியது மறக்கவே முடியாது. இவருக்கு காமெடி ஸ்கிரிப்ட் எழுத தனியாகவே சிலர் இருந்தனர். அவர்கள் யார் என்று பார்க்கலாம்.

மௌலி: 2002ல் மௌலி இயக்கத்தில் மெகா ஹிட் காமெடி திரைப்படம் ஆக வெளிவந்தது பம்மல் கே சம்பந்தம். இதில் கமல்ஹாசனுடன் சிம்ரன், அப்பாஸ், சினேகா போன்றோர் நடித்திருந்தார்கள். ஸ்டண்ட் மேனாக வேலை செய்யும் சம்பந்தம் முதலில் திருமணத்தை வெறுப்பதும் பின் சிம்ரனை உருகி உருகி காதலிப்பதும் நகைச்சுவை கலந்து பக்காவாக இருக்கும்.

Also Read:பல வருடம் கிடப்பில் போட்ட படத்தை தூசி தட்டிய ஜெயம் ரவி.. எல்லாம் இறைவன் கொடுக்கிற தைரியம்

யுகி சேது: சுந்தர் சி இயக்கத்தில் 2003இல் கமல்ஹாசன், மாதவன் கூட்டணியில் வெளிவந்தது அன்பே சிவம். கிரண், நாசர், சந்தான பாரதி, சீமா போன்றோர் நடித்துள்ளனர். யூகி சேதுவின் நகைச்சுவையும் அருமையாக இருக்கும். மனித நேயம், சமூக பிரச்சனைகளையும் தனது நேர்த்தியான நடிப்பினால் வெளிக்கொண்டு வந்திருப்பார் கமல்ஹாசன்.பெரிய அளவு வசூல் பெறவில்லை என்றாலும் கூட, நிறைய விருதுகளை பாராட்டுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரமேஷ் அரவிந்த்: 1995ல் பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்த், கோவை சரளா போன்றோர் நடித்து வெளிவந்த திரைப்படம் சதிலீலாவதி. இது பயங்கரமான ஹியூமர் கலந்த திரைப்படமாகும். இதில் ரமேஷ் அரவிந்த், கமல் ஹாசன் கூட்டணி பயங்கரமாக நகைச்சுவையாகவும் இருக்கும்.

Also Read:கமலுக்கு பிடித்த ஒரு பெயர் எல்லா ஹீரோயினுக்கும் அதான்.. அப்படி என்ன அந்த பேர்ல இருக்குன்னு தெரியலையே.!

கிரேசி மோகன்: கமல்ஹாசனின் நடிப்பு வெளிவந்த நகைச்சுவை திரைப்படங்களுக்கு பெரும்பாலும் கிரேசி மோகன் வசனம் எழுதி உள்ளார்,. இவர்களின் காம்போ பிளாக்பஸ்டர் ஹிட்டையை கொடுத்துள்ளது. இவர் உலக நாயகனுக்கு மிகப்பெரிய தூணாக இருந்தவர். மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற அனைத்து திரைப்படங்களுமே நகைச்சுவைக்கு தூணாக இருந்தவர் கிரேசி மோகன்.

நாசர்: நாசர் கமல்ஹாசன் இணைந்து நடித்து வெளியாகும் படங்கள், எப்போதுமே ஒரு துடிப்புள்ள கூட்டணியாகவே அமைந்தது. குறிப்பாக தேவர் மகன், அன்பே சிவம், அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, நாயகன், உத்தம வில்லன் போன்ற எக்கச்சக்க படங்களில் அட்டகாசமான அமைந்து.

Also Read:ஜெயிலர் போல் லியோ படத்திற்கு மாநிலம் வாரியா ஏற்பட்ட கடும் நெருக்கடி.. பெரும் தலைவலியில் தளபதி

- Advertisement -