ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஜெயிலர் போல் லியோ படத்திற்கு மாநிலம் வாரியா ஏற்பட்ட கடும் நெருக்கடி.. பெரும் தலைவலியில் தளபதி

Jailer-leo: லியோ படம் ரிலீஸாக இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாத நிலையில் அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த படத்தின் ஆடியோ லான்ச் எங்கு நடத்துவது என பல ஆலோசனைக்கு பிறகு ஒருவழியாக செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

மாஸ்டர் படத்திற்கு பின்னதாக லோகேஷ், விஜய் கூட்டணி இணைந்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதைவிட படத்தில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த படம் முழுக்க முழுக்க லோகேஷின் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

Also Read : 5 ஹீரோக்களின் வாழ்க்கையை தூக்கி நிறுத்திய லோகேஷ்.. அர்ஜுன் தாஸ்க்கு கொடுக்கப்பட்ட அதிக வாய்ப்பு

இந்த சூழலில் இப்போது லியோ ரிலீஸில் மாநில வாரியாக சிக்கலை சந்திக்க இருக்கிறது. இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகி இருக்கிறது. தமிழ் மொழியில் உருவாகி இருக்கும் லியோ படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியாக இருக்கிறது. அந்த வகையில் பாலிவுட் வசூலை அள்ளுவதற்காக சஞ்சய் தத்தை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்தனர்.

இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது போல தான் ஜெயிலர் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது லியோ படத்தை இந்தியில் வெளியிட்டால் அதன் பிறகு 8 வாரங்களில் ஓடிடியில் வெளியிட வேண்டும். அப்படி படம் விரைவில் வெளியிட்டால் வசூலில் பெருத்த லாபம் பார்க்க முடியாது.

Also Read : லோகேஷ்க்கு பின் பிரம்மாண்ட கூட்டணியில் தலைவர்-172.. ஹைப் குறையாம தொக்கா தூக்கிய ரஜினி

இதே போல் தான் ரஜினியின் ஜெயிலர் படத்தின் ரிலீசும் இந்தியில் வெளியிட முடியாமல் போனது. இதனால் ஆயிரம் கோடி வசூலை ஜெயிலர் படத்தால் அடைய முடியவில்லை. அதேபோல் விஜய்க்கு தமிழ்நாட்டை காட்டிலும் மற்ற மொழிகளிலும் அதிக ரசிகர்கள் இருந்த வருகிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் லியோ படம் ஆயிரம் கோடி வசூல் செய்து விடும் என கற்பனையில் படக்குழு இருந்த நிலையில் அதற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் விஜய்க்கு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் லலித்துக்கும் இப்போது இந்த சம்பவம் மன கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read : விஜய்யின் அப்பாவால் லியோவுக்கு வந்த ஆபத்து.. ஜெயிலர் வசூலை முறியடிக்க வாய்ப்பே இல்ல

- Advertisement -

Trending News