புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பல வருடம் கிடப்பில் போட்ட படத்தை தூசி தட்டிய ஜெயம் ரவி.. எல்லாம் இறைவன் கொடுக்கிற தைரியம்

Jayam Ravi : ஜெயம் ரவிக்கு மீண்டும் நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். பொன்னியின் செல்வன் படம் அவருக்கு வெற்றி கொடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். கைவசம் எக்கச்சக்க படங்கள் வைத்துள்ள நிலையில் விரைவில் அவரது இறைவன் படம் வெளியாக இருக்கிறது.

அகமது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்பிய நிலையில் ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் படமும் அபாரமாக இருப்பதாக விமர்சனங்கள் வந்திருக்கிறது.

Also Read : இறைவனைப் பார்த்து மிரண்ட சென்சார் போர்டு.. முதன்முறையாக ஜெயம் ரவி படத்துக்கு கிடைத்த சர்டிபிகேட்

இறைவன் படம் நிச்சயம் வெற்றி கொடுக்கும் என்ற தைரியத்தில் பல வருடங்களாக கிடப்பில் போட்ட படம் ஒன்றை ஜெயம் ரவி மீண்டும் தூசி தட்டி இருக்கிறார். அதாவது இறைவன் பட இயக்குனர் அகமது மற்றும் ஜெயம் ரவி இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய படம் தான் ஜனகனமன. கோவிட் தொற்றுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பை மேற்கொண்டு வந்தனர். அந்தச் சமயத்தில் கொரோனா உச்சம் தொட்ட நிலையில் படப்பிடிப்பை நிறுத்திவிட்டனர். இதைத்தொடர்ந்து இந்த படத்தை அப்படியே விட்டுவிட்டு இறைவன் படத்தை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Also Read : வரிசை கட்டி நிற்கும் ஜெயம் ரவியின் 5 படங்கள்.. பொன்னியின் செல்வனுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்

ஆனால் ஜனகனமன படத்தின் மேக்கிங் மிகவும் அசாதாரணமாக இருக்குமாம். ஸ்பை திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பட்ஜெட் பிரம்மாண்டமாக உள்ளது. மேலும் இறைவன் படத்தைப் பற்றி இப்போதே நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால் மீண்டும் இந்த படத்தின் வேலைகளை ஆரம்பிக்கும் முடிவில் ஜெயம் ரவி இருக்கிறாராம்.

ஜன கன மன படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல் ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். ஆகையால் ஜெயம் ரவி மீண்டும் பழைய உத்வேகத்துடன் படங்களில் செயல்பட இருக்கிறார்.

Also Read : மொத்த பட்ஜெட்டையும் ப்ரீ பிசினஸில் அள்ளிய ஜெயம் ரவி.. JR30 உரிமையை தட்டி தூக்கிய நிறுவனம்

- Advertisement -

Trending News