பிரதாப் போத்தன் இயக்கிய 5 சூப்பர் ஹிட் படங்கள்.. நெப்போலியனுக்கு வாழ்க்கையைத் தந்த சீவலப்பேரி பாண்டி

சமீபத்தில் மறைந்த பிரதாப் போத்தன் இன்றும் அவர் இயக்கிய படங்களின் மூலம் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர். இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

அதிலும் இவர் இயக்கத்தில் வெளியான 5 சூப்பர் ஹிட் படங்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரட் படங்களின் லிஸ்டில் உள்ளது. அதுமட்டுமல்ல நெப்போலியனுக்கு சீவலப்பேரி பாண்டி படத்தில் மூலம் பிரதாப் போத்தன் வாழ்க்கை கொடுத்திருக்கிறார் என்பதும் நிதர்சனமான உண்மை.

மீண்டும் ஒரு காதல் கதை: 1985 ஆம் ஆண்டு நடிகை ராதிகாவால் தயாரிக்கப்பட்டு அறிமுக இயக்குனரான பிரதாப் போத்தல் இயக்கத்தில் வெளியான இந்த படம் அதிரடி காதல் திரைப்படம் ஆகும். இதில் பிரதாப் போத்தன் மற்றும் ராதிகா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இந்த படம் மனநிலை சரியில்லாத இருவரின் உறவை பற்றிய படம். இந்த படத்திற்காக இயக்குனர் பிரதாப் போத்தனக்கு 32-வது தேசிய திரைப்பட விழாவின் அறிமுக இயக்குனருக்கான விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: 2022-ல் திடீரென்று மரணித்த 5 சினிமா பிரபலங்கள்.. காலத்தால் மறக்க முடியாத படங்களை தந்த பிரதாப் போத்தன் மறைவு 

வெற்றி விழா: 1989 ஆம் ஆண்டு பிரதாப் போத்தன் இயக்கத்தில் கமலஹாசன், பிரபு, அமலா, குஷ்பூ உள்ளிட்டோர் இணைந்து நடித்த இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டு மீண்டும் டிஜிட்டல் வடிவில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

மகுடம்: 1992 ஆம் ஆண்டு பிரதாப் போத்தன் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் சத்யராஜ், பானுப்ரியா, கௌதமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also Read: மூன்று முறை திருமணம் செய்த 6 பிரபலங்கள்.. அப்பவே லட்சுமிக்கு டஃப் கொடுத்த ராதிகா

சீவலப்பேரி பாண்டி: 1994 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்குனர் பிரதாப் போத்தன் இயக்கினார். படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதில் நெப்போலியன் கதாநாயகனாகவும், சரண்யா கதாநாயகியாகவும் நடித்திருப்பார்கள். சீவலப்பேரி பாண்டியன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கதை நகரும். இந்தப் படம் கிட்டத்தட்ட 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

சீவலப்பேரி பாண்டி நெப்போலியனுக்கு சினிமாவில் திரும்பிப் பார்க்கக் கூடிய கதாபாத்திரமாகவே அமைந்தது. இந்த படத்தின் மூலம் தான் நெப்போலியன் சினிமா கெரியர் டாப் கிரில் சென்றது. இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் பிரதாப் போத்தன் நெப்போலியனுக்கு சீவலப்பேரி பாண்டி படத்தில் கொடுத்த வாய்ப்புதான் அவருடைய வாழ்க்கையவே மாற்றியது.

லக்கி மேன்: 1995 ஆம் ஆண்டு நகைச்சுவை திரைப்படமாக வெளியான இந்த படத்தை பிரதாப் போத்தன் இயக்கி கார்த்திக், கவுண்டமணி, செந்தில், சங்கவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியினால் தெலுங்கிலும் மறுஆக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: இறப்பதற்கு முன் பிரதாப் போத்தன் போட்ட மரணம் குறித்த பதிவுகள்.. படித்து கண் கலங்கும் ரசிகர்கள்

இவ்வாறு இந்த 5 படங்களையும் இயக்கிய பிரதாப் போத்தன் ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனராக வெகு சீக்கிரமே மாறினார். இந்த படங்கள் அனைத்தும் திரையரங்கில் தாறுமாறாக ஓடி வெற்றியும் பெற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்