சத்யராஜின் 5 சூப்பர் ஹிட் படங்கள்.. நாகராஜ சோழனாய் மாறிய தேங்காய் பொறுக்கிய அமாவாசை

5 super hit films of Actor Sathyaraj: 80ஸ் காலகட்டத்தில் இருந்து இன்று வரை நடிகர், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் என வெவ்வேறு வேடம் ஏற்று வெள்ளி திரையில் தனக்கிருக்கும் தீராத தாகத்தை தீர்த்து வருகிறார் சத்யராஜ். எம்ஜிஆர் ரசிகனாக தன்னை பெருமைப்படுத்தி கொண்ட சத்யராஜ் அவர்கள் பெரியாரின் கொள்கையின் மீதும் ஈர்ப்பு கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இவரது அசால்ட்டான நடிப்பில் வெளியான 5 சூப்பர் ஹிட் படங்களை காணலாம்.

பூவிழி வாசலிலே: ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த சத்யராஜிற்கு1986 பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கடலோர கவிதைகள் இவரது சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து பாசில் இயக்கத்தில் 1987ஆண்டு வெளியான பூவிழி வாசலிலே திரில்லர் சஸ்பென்ஸ் திரைப்படம் சத்யராஜின் யதார்த்தமான நடிப்பால் திரையில் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

நடிகன்: தமிழ் சினிமாவின் மகா நடிகனான சத்யராஜுக்கு இந்த நடிகன் திரைப்படம் மேலும் மெருகேற்றியது போல் ஒரே படத்தில் குஷ்பூ மற்றும் மனோரமாவிற்கு ஜோடியாக இரு வேறு வயது வித்தியாசத்தில்   கவுண்டமணியுடன் காமெடியில் கலக்கி அமர்க்களப்படுத்தினார்.

Also read: தமிழ் சினிமாவை கெடுத்து குட்டிச்சுவராக்கும் விஷயங்கள்.. உண்மையை போட்டுடைத்த சத்யராஜ்

வால்டர் வெற்றிவேல்: 1993 ஆண்டு பி வாசு இயக்கத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடித்திருந்தது வால்டர் வெற்றிவேல்.  அராஜகத்துடன் கூடிய ஊழல்வாதியான அமைச்சரை சத்யராஜ் அடிக்கும்படியாக காட்சி படுத்திவிட்டு ரிலீசின் போது இந்த திரைப்படத்தை ஜெயலலிதாவிற்கு போட்டுக் காட்ட பயந்து போனாராம் பி வாசு. இதை பார்த்த ஜெயலலிதா நேர்மையான அதிகாரியை கண்முன் காட்டி விட்டீர்கள் என்று பாராட்டி விட்டு சென்றாராம்.

அமைதிப்படை: படத்தில் நாயகன் அளவுக்கு வில்லனை கொண்டாட முடியும் என்றால் அது அமைதிப்படை சத்தியராஜாக மட்டும்தான் இருக்க முடியும்.  தேங்காய் பொறுக்கிய அமாவாசை அரசியலில் குறித்து சோழர் பரம்பரையில் ஒரு எம்எல்ஏ என்று தம்பட்டம் அடித்து படத்தின் இறுதி வரை அரசியல் தில்லுமுல்லுகளை அக்கு அக்காக பிரித்து மேய்ந்திருந்தார் சத்யராஜ். இவரின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைதிப்படை அமைந்தது.

வில்லாதி வில்லன்: படத்தின் பெயருக்கு ஏற்றார் போல் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வில்லாதி வில்லனாக உருவெடுத்தார் சத்யராஜ். 1995 ஆண்டு வெளிவந்த இந்த வில்லாதி வில்லன் திரைப்படத்தை முதலும் கடைசியும் ஆக சத்யராஜ் இயக்கியிருந்தார். சத்யராஜ், ராதிகா, நக்மா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இப்படத்தில் சாஸ்ரியாக வரும் வயதான மாற்றுத்திறனாளி சத்யராஜ் வசனங்கள் மூலம்  மக்களின் அறியாமையை கூறு போட்டு தெறிக்க விட்டிருந்தார் எனலாம்.

Also read: ஒற்றை பாடல் வரியால் ரஜினியை சீண்டிய சத்யராஜ்.. 38 ஆண்டுகள் ஆகியும் முணுமுணுக்க வைக்கும் பாடல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்