Home Tamil Movie News சொந்த குரலில் லதா ரஜினிகாந்த் பாடிய 5 பாடல்கள்.. நட்புக்காக செய்த விஷயம்

சொந்த குரலில் லதா ரஜினிகாந்த் பாடிய 5 பாடல்கள்.. நட்புக்காக செய்த விஷயம்

latha-rajinikanth
latha-rajinikanth

Latha Rajinikanth: ரஜினிகாந்த் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறாரோ அதே அளவுக்கு அவருடைய குடும்பத்தினரும் மீடியாவில் பிரபலமாக தான் இருக்கிறார்கள். அதில் அவருடைய மகள்கள் இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த்தும் ஒரு விஷயத்தில் மிகவும் திறமையானவர் தான்.

அதாவது இவருக்கு அருமையான குரல் வளம் உண்டு. அது மட்டுமல்லாமல் சினிமாவில் பாட வேண்டும் என்பது இவருடைய கனவாகவும் இருந்திருக்கிறது. சூப்பர் ஸ்டாரை திருமணம் செய்து கொண்ட பிறகு இவர் தன்னுடைய ஆசையை அவரிடம் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

Also read: ரஜினி முகத்தில் காரி துப்பிய பாரதிராஜா.. சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பின்னால் இருக்கும் உழைப்பு

உடனே ரஜினியும் அதற்கு சம்மதம் கொடுத்திருக்கிறார். அதன்படி லதா பாடிய முதல் பாடலே பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த டிக் டிக் டிக் என்ற படத்தில் தான். அதில் இடம்பெற்றிருக்கும் நேற்று இந்த நேரம் என்ற பாடலை தான் இவர் பாடியிருக்கிறார். நட்புக்காக அவர் இப்படத்தில் பாடி கொடுத்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் தன்னுடைய அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் பாடும் படி கூறி இருக்கிறார். அப்படி லதா பாடிய பாடல் தான் கடவுள் உள்ளமே என்ற பாடல். கவிஞர் வாலி எழுதியிருந்த இந்த பாடலை அவர் அற்புதமாக பாடி கொடுத்திருப்பார்.

Also read: குட்டிப் பகை ஆடு உறவா.? குடும்ப சண்டை, ரஜினியை விட்டுக் கொடுக்காத மருமகன்.. உச்சி குளிர்ந்து போன சூப்பர் ஸ்டார்

இந்தப் பாடலுக்குப் பிறகு லதா தயாரிப்பில் ரஜினி கௌரவ தோற்றத்தில் நடித்திருந்த வள்ளி படத்திலும் இரண்டு பாடல்களை பாடி இருக்கிறார். அந்த வகையில் டிங் டாங், குக்கூ ஆகிய பாடல்களை பாடி இருக்கிறார். அதை அடுத்து கோச்சடையான் படத்திலும் மணப்பெண்ணின் சத்தியம் என்ற பாடலையும் பாடி இருக்கிறார்.

அந்த வகையில் அவர் இந்த ஐந்து பாடல்களை மட்டுமே இதுவரை பாடி இருக்கிறார். இவ்வாறு பன்முக திறமை கொண்ட இவர் வள்ளி திரைப்படத்தில் காஸ்டியூம் டிசைனராகவும் இருந்திருக்கிறார். இப்படி சூப்பர் ஸ்டார் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தனித்திறமையுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ரஜினியை பிடிக்காதவர்கள் செய்யும் நச்சு வேலை.. தளபதியை வைத்து ஆடும் ஆடுபுலி ஆட்டம்