சிக்ஸ் பேக் வைத்து பிரயோஜனம் இல்லாத 5 நடிகர்கள்.. தொடர் தோல்விகளை கொடுத்து வரும் காதல் பரத்

Actor Santhosh Prathap: தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு எல்லா தகுதியும் இருந்தும் ஒரு சில நடிகர்கள் இன்று வரை ஒரு வாய்ப்பு கூட கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கின்றனர். முன்னணி ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் வகையில் ஆக்சன் ஹீரோ மெட்டீரியல் போல் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்துக் கொண்டு இந்த ஐந்து நடிகர்கள் இன்று வரை ஒரு பட வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். என்னதான் சிக்ஸ் பேக் வைத்துக் கொண்டு இவர்கள் சுற்றினாலும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் தான் இருக்கிறார்கள்.

மாஸ்டர் மகேந்திரன்: குழந்தை நட்சத்திரமாக இருக்கும் பொழுது தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் மாஸ்டர் மகேந்திரன். ஆனால் தற்போது ஹீரோவாக ஒரு வெற்றி படம் கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். சிக்ஸ் பேக் எல்லாம் ஏற்றி தயாராக இருக்கும் இவருக்கு ஹீரோ வாய்ப்பு கொடுக்க தான் இயக்குனர்கள் இல்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தால், அந்த படத்தில் நடித்தும் அவருக்கு எந்த பிரயோஜனமும் இல்லாமல் தான் இருக்கிறது.

Also Read:இருக்கும் இடம் தெரியாமல் போன விஷால், பரத்.. புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட பரிதாபம்

பரத்: தமிழ் சினிமாவில் சாக்லேட் ஹீரோவாக வலம் வரக்கூடிய அத்தனை தகுதியும் இருந்தும் நடிகர் பரத் ஆக்சன் ஹீரோவாக களம் இறங்க வேண்டும் என்ற ஆசையில் வைத்த சிக்ஸ் பேக் தான் அவருடைய கேரியரே சோலி முடித்தது என்று சொல்லலாம். சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு அடுத்தடுத்த ஆக்சன் படங்களில் நடித்த இவருக்கு அத்தனையுமே தோல்வி படங்களாக முடிந்து விட்டது.

கணேஷ் வெங்கடராமன் : நடிகர் கணேஷ் வெங்கட்ராமனுக்கு மற்ற கேரக்டர்களை விட போலீஸ், அதிகாரி போன்ற கேரக்டர்கள் பக்காவாக பொருந்தி இருக்கும். அதற்கு மிக முக்கிய காரணம் அவருடைய உடல்வாகு மற்றும் சிக்ஸ் பேக் தான். ஆனால் ஆரம்பத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த இவருக்கு தற்போது அந்த வாய்ப்புகள் கூட கிடைக்கவில்லை.

Also Read:தோல்வியில் முடிந்த 5 காதல் படங்கள்.. பரத்தை பைத்தியமாக அலையவிட்ட சந்தியா

ரியாஸ்கான்: காமெடி, ஆக்சன், வில்லன் என அத்தனையிலும் முயற்சி செய்து பார்த்து விட்டார் நடிகர் ரியாஸ்கான். இன்று வரை கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் இருக்கும் இவர் பல நடிகர்களுக்கு பிட்னஸ் ட்ரைனிங் சொல்லிக் கொடுத்தவர். ஆனால் இன்று வரை இவருக்கு தமிழ் சினிமாவில் சரியான ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சந்தோஷ் பிரதாப்: நடிகர் சந்தோஷ் பிரதாப் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர். அதன் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர் விஜய் டிவியின் பிரபல ஷோவான குக் வித் கோமாளியில் கலந்து கொண்டார். அதன் பின்னரும் வாய்ப்பு கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த இவருக்கு சமீபத்தில் கொன்றால் பாவம் என்னும் திரைப்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இருந்தாலும் ஒரு ஹீரோவாக தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் தான் சந்தோஷ் இருக்கிறார்.

Also Read:ஒரு பட வாய்ப்புக்காக ஏங்கி கொண்டிருக்கும் பரத்.. கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டாத பரிதாப நிலைமை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்