புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

கிட்டத்தட்ட 70% முடிந்த 5 இரண்டாம் பாகம் படங்கள்.. தெறிக்கவிடும் வெற்றிமாறன் குமரேசன் கூட்டணி

தமிழ் சினிமாவில் தற்போது மிக ட்ரெண்டாகி வருகிறது ஏற்கனவே வெளிவந்த ஹிட் படத்தின் தொடர்ச்சியாக அந்தப் படத்தின் இரண்டாம் பாகங்களை எடுத்து வெளியிடுவது தான். அப்படி ஏற்கனவே வெளிவந்த ஹிட் படங்களின் பார்ட் 2 தற்போது வெளிவர இருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம்.

டிமான்டி காலனி 2: ஆர்.அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு டிமான்டி காலனி திரைப்படம் வெளிவந்தது. இதில் அருள்நிதி, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள், இப்படம் ஒரு திரில்லர் படமாக அனைவரும் பயத்துடன் பார்க்கப்பட்ட படமாக வெளிவந்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்திற்கு அதிக வரவேற்பு வந்ததால் இதனுடைய இரண்டாம் பாகம் தற்போது வெளிவர இருக்கிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்து விட்டது. இதில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அத்துடன் அருள்நிதி படம் எப்போதுமே சற்று வித்தியாசமாகவும் கதை நன்றாகவும் தான் இருக்கும். அதனால் இப்படத்திற்கான இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கு ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: ஜெமினி கணேசனை காதல் வசப்படுத்திய 4 பெண்கள்.. 78 வயதில் நடந்த நான்காவது திருமணம்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா திரைப்படம் வெளிவந்தது. இதில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் எப்படி வில்லனாக இருக்கும் ஒருவரை எல்லோரும் சிரிக்கும் படி அவருக்கே தெரியாமல் காமெடியனாக ஆக்கும் கதையை வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் பார்க்கும் போது நேரமே எப்படி போகிறது என்று தெரியாத அளவிற்கு கதை அமைந்திருக்கும். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெருத்த லாபத்தை கொடுத்தது. தற்போது இதனுடைய இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார்கள். அதிலும் இவர்களுடைய நடிப்பை பார்க்கும் போது ஆக்ரோஷமாக இருக்கிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பை சீக்கிரத்தில் முடித்து ஜூலை மாதம் வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்தியன் 2: ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் இந்தியன் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் ஊழலை ஒழிப்பதில் விழிப்புடன் இருக்கும் ஒரு முன்னாள் சுதந்திரப் போராட்ட வீரர் வைத்து கதை அமைந்திருக்கும். இப்படம் தமிழ் திரைப்படத்திற்கான சாதனையை முறியடிக்கும் வகையில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதனால் 25 வருடங்களுக்கு மேலாக இப்படம் மறுபடியும் பார்ட் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் கூடிய விரைவில் திரையரங்களில் வெளியிட இருக்கிறார்கள்.

Also read: சினேகாவுடன் கிசுகிசுக்கப்பட்ட 6 நடிகர்கள்.. ஒரே படத்தில் கேரக்டரை டேமேஜ் பண்ணிய தனுஷ்

தனி ஒருவன் 2: மோகன் ராஜா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு தனி ஒருவன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அரவிந்த்சாமியின் நேர்த்தியான நடிப்பும், ஜெயம் ரவியின் துணிச்சலான நடிப்பும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தது. இப்படம் அரவிந்த்சாமிக்கு ரி என்ட்ரி படமாக கைத்தூக்கி விட்டது. இதனுடைய இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் இப்படத்திற்கான அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

விடுதலை 2: வெற்றிமாறன் இயக்கத்தில் மார்ச் மாதம் வெளியான விடுதலை படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்புடன் வெளியானதில் இவர்களின் இரண்டு பேர் நடிப்புக்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அத்துடன் இதனுடைய இரண்டாம் பாகம் தற்போது முடிந்த நிலையில் கூடிய விரைவில் இதற்கான ரிலீஸ் செய்தியை அறிவித்து திரையரங்கில் வீடுவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த குட் நைட்.. இதோ ட்விட்டர் விமர்சனம்

- Advertisement -spot_img

Trending News