நடனத்தை வைத்து ஜெயித்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. இன்று வரை எடுக்க முடியாதுன்னு ஒத்துக்கொண்ட சிவாஜி படம் 

5 hit films won by dance in tamil cinema: தமிழ் சினிமாவில் வித்யாசமான கதை அம்சத்துடன் வரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உண்டு. அதையும் தாண்டி நடனம் மற்றும் இசையை கதைக்களமாக கொண்டு வெளிவந்த திரைப்படங்கள் எவர்கிரீன் மூவியாக ரசிகர்கள் மனதில் நீங்கா வண்ணம் நிலைத்திருக்கின்றன. அதில் நடனத்தை மையமாக வைத்து முன்னணி நடிகர்களின் அசாத்திய நடிப்பில்  வெளிவந்து ஹிட் அடித்த 5 படங்களை காணலாம்,

கமல் மற்றும் ஜெயப்பிரதாவின் நடிப்பில் பரதத்தை மையமாக வைத்து 1983 ஆண்டு வெளிவந்த திரைப்படமே சலங்கை ஒலி. 40 ஆண்டுகளை கடந்த பின்னும் இன்று வரை பல இசைக்கச்சேரிகளில் கடவுள்வாழ்த்தாக அமைகின்றன திரைப்படத்தின் பாடல்கள். செல்வராகவன் பேட்டி ஒன்றில் சலங்கை ஒலி போன்று ஒரு படம் இயக்கினால் இந்த தமிழ் திரையுலகை விட்டே சென்று விடுவேன் என்று இப்படத்தின் மீதான காதலால் கசிந்து உருகினார் இயக்குனர். 

கங்கை அமரனின் இயக்கத்தில் கிராமியத்து மணத்துடன் கரகாட்ட கலைஞர்களின் காதலை நகைச்சுவையுடன் கலந்து 1989 ல் வெளிவந்த திரைப்படமே கரகாட்டக்காரன். இப்படம் ராமராஜனின் திரை வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட். இன்றும்  கிராமத்து கோயில் விழாக்களிலும், இசை கச்சேரிகளிலும்  தவறாது இடம்பெறுகின்றன இதன் பாடல்கள்.

Also read:ராணுவத்தில் இருந்து ராஜ்கமல் பிலிம்ஸ்க்கு போன ஈமெயில்.. வந்த கரும்புள்ளியால் பதறிப்போய் ஆண்டவர் அடித்த அந்தர்பல்டி

ஜென்டில்மேன் வெற்றிக்குப் பின் பரதத்தை கருப்பொருளாகக் கொண்டு சங்கர் இயக்கிய திரைப்படமே காதலன். நாயகி பரதத்தின் மேல் காதல் கொள்ள! நாயகன் நாயகி மேல் காதல் கொள்ள! பரதத்தின் மூலம் தன் காதலை உணர வைத்து சபாஷ் வாங்கி இருந்தார் சங்கர். இதில் பாடகர் எஸ் பி பி யையும் பரத கலைஞராக ஆட வைத்து அமர்க்களம் பண்ணி இருந்தார் சங்கர்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில்  கிராமத்து கலைக்கும் பரதநாட்டியத்திற்கும் ஏற்படும் போட்டியாக அமைந்த திரைப்படமே சங்கமம்.1999 ஆண்டு வெளிவந்த திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமானின் இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் வேற லெவல்ல ஹிட்டானது. இன்று வரை  மேடை கலைஞர்களின் தகுதி சுற்றில் தவறாது இடம் பிடித்து விடுகின்றது இந்த படத்தின் நடனமும் பாடல்களும்.

1968 ஆண்டு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து தமிழ் திரைஉலகயே நடனத்தால், இசையால் தெறிக்க விட்ட திரைப்படம் தான் தில்லானா மோகனாம்பாள். பல விருதுகளை அள்ளி குவித்த இத்திரைப்படத்தை போல் இன்று வரை எந்த படமும் வந்ததில்லை என்பது தான் இந்த படத்திற்கான பெருமை. சிவாஜி கணேசனுக்கு போட்டியாக நாட்டிய மயூரி பத்மினி அவர்கள் பரதத்திலேயே பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கட்டி போட்டு இருந்தார். 

Also read: ரஜினியா இருக்க போய் பிரச்சனையிலிருந்து தப்பித்த சங்கர்.. கஷ்டத்தை கூட ஜாலியாக 4 பேரிடம் பகிர்ந்த சூப்பர் ஸ்டார்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்