புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ரஜினி குடும்பத் தலைவன் கதாபாத்திரத்தில் நடித்த 5 படங்கள்.. 90களில் வானவராயனாய் பல பெண்களைக் கவர்ந்த தலைவர்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரராக இருக்கக்கூடியவர் தான் நடிகர் ரஜினிகாந்த். மேலும் இவர் தனது படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அதிலும் குடும்பத் தலைவன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குடும்பப் பெண்களை தன் வசப்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு எஜமான் படத்தில் வானவராயனாக நடித்து கெத்து காட்டி இருப்பார். இப்படியாக ரஜினி குடும்ப தலைவன் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த 5 படங்களை இங்கு காணலாம்.

ஆறிலிருந்து அறுபது வரை: இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆறிலிருந்து அறுபது வரை. இதில் ரஜினிகாந்த் உடன் படாபட் ஜெயலட்சுமி, சோ ராமசாமி, தேங்காய் சீனிவாசன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் ரஜினிகாந்த் சந்தானம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் சிறு வயதிலேயே தந்தையின் பாரத்தை சுமந்து தனது சகோதரர்களுக்காக கடுமையாக உழைக்கும் குடும்பத் தலைவன் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். 

Also Read: இருவரின் பிரிவை தாங்க முடியாத நடிகை.. யாரு கண்ணு பட்டுச்சோ மேடையிலேயே கண்கலங்கிய ரஜினி

முள்ளும் மலரும்: இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் முள்ளும் மலரும். இதில் ரஜினிகாந்த் உடன் படாபட் ஜெயலட்சுமி மற்றும் ஷோபா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் ரஜினிகாந்த் காளி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் குடும்ப பாரத்திற்காக  கடுமையாக உழைக்கும் குடும்பத் தலைவனாக மாஸ் காட்டி இருப்பார்.

கை கொடுக்கும் கை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1984 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் கை கொடுக்கும் கை. இதில் ரஜினிகாந்த் உடன் ரேவதி ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். மேலும் ரஜினிகாந்த் காளிமுத்து கதாபாத்திரத்திலும், ரேவதி சீதா என்னும் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் குடும்பத் தலைவனாக மனைவியின் மீது அதிக பாசம் உள்ள கணவனாக அனைவரது நெஞ்சங்களையும் உருக வைத்திருப்பார்.

Also Read: வளர்த்து விட்டவர்கள் எல்லாம் கை விரித்த பரிதாபம்.. மொத்த சருக்களுக்கு காரணமாய் அமைந்த ரஜினியின் படம்

காலா: இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான அதிரடி திரைப்படம் ஆகும். இதில் ரஜினிகாந்த் உடன்  ஹியூமா குரோஷி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படம் மும்பையில் உள்ள தாராவியில் வாழும் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் ஆகும். அதிலும் தனது மனைவி மற்றும் மகள் மீது பாசமிகுந்த தந்தையாக மாஸ் காட்டி இருப்பார்.

எஜமான்: இயக்குனர் ஆர்பி உதயகுமார் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் எஜமான். இதில் ரஜினிகாந்த் உடன் மீனா ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து நம்பியார், மனோரமா, நெப்போலியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் வானவராயன் கதாபாத்திரத்தில் மனைவியின் மீது மிகுந்த பாசம் கொண்ட கணவனாக நடித்து அசத்தியிருப்பார்.

Also Read: கொடூர வில்லனாய் நெப்போலியன் கலக்கிய 5 படங்கள்.. வல்லவராயனாய் ரஜினியை படாதபாடுப்படுத்திய எஜமான் படம்

- Advertisement -

Trending News