பொங்கலை குறிவைத்து களமிறங்கும் 5 படங்கள்.. பான் இந்தியா படங்களால் வரும் ஆபத்து

விடுமுறை நாட்களை குறிவைத்து வசூலை அள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் போட்டி போட்டுக்கொண்டு ரிலீஸாகும், அப்படி தமிழர்கள் மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடக்கூடிய பொங்கல் பண்டிகையை குறிவைத்து 5 படங்கள் ரிலீஸாகிறது. அதிலும் தல, தளபதி படங்களுக்கு போட்டியாக பான் இந்திய படங்களும் பெரிய ஆபத்தாக மாறியுள்ளது

வாரிசு: தளபதி விஜயின் பீஸ்ட் படத்திற்குப் பிறகு அவருடைய ரசிகர்கள் அடுத்து ஆவலாக எதிர்பார்க்கும் படம் வாரிசு. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி கொண்டிருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக அவருடைய தீவிர ரசிகையும் தென்னிந்திய நடிகையுமான ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்துள்ளார்.

பக்கா சென்டிமென்ட் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தற்போது ஹைதராபாத்தில் படுவேகமாக நடந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் அக்டோபர் மாதத்தில் நடைபெறப்போகிறது. பாக்ஸ் ஆபிஸில் வசூல் நாயகனாக விஜய், பொங்கல் பண்டிகையில் வாரிசு படத்தை வைத்து வசூலை அள்ள காத்திருக்கிறார்.

Also Read: ரகசியமாக வைக்கப்பட்ட ஏகே 61 பட டைட்டில்.. இந்த ரெண்டில் ஒன்றை லாக் செய்யும் வினோத்

ஏகே 61: வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடித்திருக்கும் ஏகே 61 படத்தில், அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். மலையாள நடிகை மஞ்சு வாரியர், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் போட்டு நடத்தப்பட்டது.

வங்கி கொள்கையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பாங்காங்கில் அஜித் நடிக்கும் ஆக்ஷன் காட்சியை படமாக்கி கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடித்து, பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் வாரிசு படத்துடன் ஏகே 61 நேரடி மோதலுக்கு தயாராகி வருகிறது.

ஹரி ஹர வீரமல்லு: இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதால், அதைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

போலா ஷங்கர்: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், அந்தப் படம் தெலுங்கில் போலா ஷங்கர் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். மெஹர் ரமேஷ் இயக்கும் இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷும், அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். தென்னிந்திய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் இந்தப் படமும் வரும் பொங்கல் அன்று ரிலீஸாகிறது.

Also Read: அஜித்துக்கு பயத்தை காட்டிய சினிஉலகம்.. ஈகோவை விட்டு இறங்கி வரும் ராஜதந்திரம்

ஆதிபுருஷ்: ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சையஃப் அலிகான், கிரித்தி சனோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம், ராமாயண கதையாக உருவாகிறது. ராமன் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருக்கிறார். ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான் நடிக்கிறார்.

ஆதிபுருஷ் படத்திற்காக பிரபாஸும் சையஃப் அலிகானும் உடல் தோற்றத்தில் பயங்கர மாற்றத்தை கொண்டுவந்து ரசிகர்களிடம் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற விட்டனர். 500 கோடி பொருட்செலவில் இந்தி, தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்கின்றனர்.

இப்படி பொங்கலுக்கு மெகா பட்ஜெட் படங்கள் களமிறங்குகிறது. இதனால் இந்த ஐந்து படங்களுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு கலெக்சனிலும் பான் இந்தியா படங்கள் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது.

Also Read: நீங்க அப்படி செஞ்சா, நாங்க இப்படி செய்வோம்.. விஜய்க்கு போட்டியாக விஜய் டிவி பிரபலங்கள் செய்த காரியம்

Next Story

- Advertisement -