முதல் ஆறு மாதத்தில் நம்ம சினிமாவை தூக்கிவிட்டு அழகு பார்த்த 5 படங்கள்.. சிம்மாசனம் போட்டு உச்சத்தில் சென்ற மகாராஜா

Vijay sethupathi In Maharaja: என்னதான் விழுந்து புரண்டாலும் ஒட்டுற மண்தான் ஒட்டும் என்று ஒரு சொலவடை உண்டு. அதுபோல்தான் தமிழ் சினிமாவின் நிலைமையும் ஆகிவிட்டது. ஒரு காலத்தில் இங்குள்ள கதைகளும் படங்களும் சூப்பர் என்று சொல்லிக்கொண்டு மற்ற மொழியில் இருந்து தமிழ் படத்தை ரீமேக் செய்து அங்கே வெற்றியை பார்த்தார்கள். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் இருந்து வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பராக இருக்கும்.

ஆனால் இப்பொழுது அப்படி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வசூலில் எப்படி லாபத்தை சம்பாதிக்கலாம் என்று மாஸாக கொண்டு வருகிறார்கள். அதனால் தான் என்னமோ கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் சினிமாவில் உள்ள படங்களை தூக்கிக் கொண்டாடும் அளவிற்கு இல்லாமல் போய்விட்டது.

ஒரே பாலில் சிக்ஸர் அடித்த மகாராஜா

இதனால் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற மொழி படங்களை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் மலையாள படங்களில் சக்கை போடு போட்ட பிரேமலு மற்றும் மஞ்சுமால் பாய்ஸ் போன்ற படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இங்கே வெற்றியை பார்த்தது. இப்படியே போனால் தமிழ் சினிமா என்ன கெதி ஆகும் என்று ஒரு கேள்விக்குறி பலருக்கும் ஏற்பட்டுவிட்டது.

ஆனால் அதையெல்லாம் போக்கும் விதமாக இந்த வருடத்தில் ஆரம்பித்த முதல் ஆறு மாசத்தில் சில படங்கள் தமிழ் சினிமாவை தூக்கி அழகு பார்த்து விட்டது. அந்த வகையில் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான அயலான் மற்றும் கேப்டன் மில்லர் இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக 100 கோடி லாபத்தை பார்த்தாலும் விமர்சன ரீதியாக பெருசாக சொல்லும்படி பெயர் எடுக்காமல் போய்விட்டது.

அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4, சூரி மற்றும் சசிகுமார் நடிப்பில் கருடன், மேலும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா போன்ற இந்த மூன்று படமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுவிட்டது. அதிலும் சுந்தர்சி, பேயை வைத்து தொடர்ந்து எடுத்து வந்தாலும் போர் அடிக்காத வகையில் அரண்மனை 4 குடும்பத்துடன் பார்க்கும் அளவிற்கு வெற்றி பெற்றுவிட்டது.

அத்துடன் சமீபத்தில் வெளிவந்த மகாராஜா படம் ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பார்க்காத சஸ்பென்ஸ் செய்யும், திரளரான கதையை வைத்து சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு கைதட்டளை வாங்கி விட்டது. இதன் மூலம் விஜய் சேதுபதி விட்ட இடத்தை பிடிக்கும் வகையில் ஹீரோ இமேஜை தக்க வைத்துக்கொண்டு தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இந்த வருடம் முடிவதற்குள் மீதம் இருக்கும் ஆறு மாதத்திற்குள் வெளிவர இருக்கும் படங்களும் தமிழ் சினிமாவின் மானத்தை காப்பாற்றி விடுமா என்ற கேள்விக்குறி நிலவ ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில் ரஜினி நடிப்பில் வேட்டையன், கமல் நடிப்பில் இந்தியன் 2 மற்றும் தக் லைப், அஜித் நடிப்பில் விடா முயற்சி, விஜய்யின் கோட், விக்ரமின் தங்கலான், சூர்யாவின் கங்குவா, தனுஷ் நடிப்பில் ரயான் போன்ற படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.

இதில் யாருக்கு வெற்றி கிடைக்கிறது யாருடைய படங்கள் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெறுகிகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சமீபத்தில் வெளிவந்த படங்களின் அப்டேட்

Next Story

- Advertisement -