சூரிக்காக போட்டி போடும் சூர்யா Vs சிவகார்த்திகேயன்.. களத்தில் வரிசை கட்டி நிற்கும் 4 படங்கள்

Soori Upcoming Movies: நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சந்தானம் காமெடி பண்ணும் போது நான் காமெடியன் தான் என்று சொல்லிக்கொண்டு ஹீரோவாக மக்கள் முன் ஜெயித்துக் காட்டிய சூரியின் உழைப்பும் விடாமுயற்சியும் வெற்றி பெற்று விட்டது என்று சொல்லலாம். அதுவும் ஒரு படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் என்றால் எந்த அளவிற்கு மெனக்கீடு செய்திருப்பார்.

அந்த வகையில் கடந்த வருடம் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அவதரித்த சூரி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார். காமெடியனாக நடிக்கும் பொழுது சுமாராக இருந்த சூரி இப்போது ஹீரோவாக மாறிவிட்டதும் முகத்தில் பிரகாசம் வர ஆரம்பித்து விட்டது.

ஹீரோவாக அடுத்தடுத்து வாய்ப்பை பெற்று வரும் சூரி

இதனை தொடர்ந்து இவர் கொடுத்து வரும் பேட்டிகளில் சூரி பார்ப்பதற்கு அச்சு அசலாக ஹீரோ இமேஜை பெற்றுவிட்டார். அந்த வகையில் இன்னும் அடுத்தடுத்த படங்களில் வில்லனாகவும் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் சமீபத்தில் வெளிவந்த கருடன் படத்தில் சூரியின் நடிப்பை பார்க்கும் போது மெய்சிலிர்ந்து விட்டது என்று சொல்லும் அளவிற்கு மிரள விட்டு விட்டார்.

இப்படி ஹீரோவாக நடித்த இரண்டு படமும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்து வர இருக்க விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் சூரிக்கு வெற்றிவாகை சூடிவிடும். இதனைத் தொடர்ந்து கூழாங்கல் படத்தை எடுத்த இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் ஏற்கனவே சர்வதேச அளவில் அங்கீகாரங்களை பெற்று விட்டது.

இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து இருக்கிறார். மேலும் சூரிக்கு ஜோடியாக இதில் அன்னா பென் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வித்தியாசமான நடிப்பை எதிர்பார்க்கலாம் என்று சூரி அதிக அளவில் ரிஸ்க் எடுத்து நடித்ததாக கூறியிருக்கிறார். இப்படத்திற்கு பிறகு ஏழு கடல் ஏழுமலை படத்திலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து விலங்கு படத்தை எடுத்த பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை சூர்யா தயாரிக்க நினைக்கிறார். அந்த வகையில் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் மூலம் சூரியை வைத்து சூர்யா வலை விரித்து விட்டார். தற்போது ஹீரோவாக சூரி நடித்த படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு என்பதால் இவருடைய படத்தை தயாரிப்பதற்கு சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா போட்டி போட்டு தயாரிக்க முன் வந்திருக்கிறார்கள்.

சூரி-யின் கருடன் படத்தின் வேட்டை

Next Story

- Advertisement -