அரண்மனை 4, மகாராஜா உண்மையில் 100 கோடியை வசூலித்ததா.? உருட்டுறதா இருந்தாலும் மனசாட்சி வேணாமா

Aranmani 4-Maharaja: இந்த வருட ஆரம்பத்தில் தமிழில் வெளிவந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வசூல் லாபம் பார்க்கவில்லை. அதை அடுத்து மே மாதம் வெளியான அரண்மனை 4 ஆடியன்ஸை தியேட்டர் பக்கம் வரவைத்தது.

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி ண்ணா, கோவை சரளா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் அதில் நடித்திருந்தனர். வழக்கம்போல திகில் காமெடி கலவையாக வெளிவந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து படம் 100 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படம் வெளியான பிறகு ஸ்டார், இங்க நான் தான் கிங்கு, கருடன் போன்ற படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியானது.

அதனால் அரண்மனை 4 வசூல் இரண்டு வாரங்களுக்கு பிறகு கொஞ்சம் டல்லடிக்க ஆரம்பித்தது. அதை வைத்து பார்க்கும் போது இப்படம் உலக அளவில் 94 கோடிகளை தான் வசூலித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் நூறு கோடியை தாண்டி விட்டதாக விளம்பரப்படுத்தி விட்டனர்.

அரண்மனை 4, மகாராஜா வசூல் ரிப்போர்ட்

அதேபோல் ஜூன் 14ஆம் தேதி வெளியான மகாராஜா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இப்படம் வெளியான சில வாரங்களிலேயே 100 கோடியை வசூலித்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் இப்போது விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் கடந்த வாரம் கல்கி படம் வெளியானது. உலகம் முழுவதிலும் வெளியிடப்பட்ட இப்படம் தமிழ்நாட்டில் வரவேற்பை பெற்று வருகிறது.

அதேபோல் இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு மகாராஜா, கருடன் போன்ற படங்களுக்கான ஸ்கிரீன்களும் குறைக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும்போது நிச்சயம் மகாராஜா வசூல் சரிவை சந்தித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதன்படி இப்படம் மொத்தமாகவே 77 கோடிகளை தான் வசூலித்துள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் இரண்டே வாரங்களில் இப்படம் 100 கோடி என படகுழு அறிவித்துவிட்டது. உண்மையில் இதுதான் இப்போது புது பேஷனாக இருக்கிறது. ஒரு படம் வரவேற்பை பெற தொடங்கி விட்டால் உடனே 100 கோடியை வசூலித்து விட்டதாக உருட்டுகின்றனர்.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு படம் 10 நாட்கள் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடுவதே குதிரைக்கொம்பாக இருக்கிறது. அப்படி இருக்கும் போது டாப் ஹீரோக்களின் இமேஜ் சரிந்து விடக்கூடாது என்பதற்காகவே இது போன்ற அறிவிப்பை வெளியிடுகின்றனர். ஆக மொத்தம் படத்தை எடுத்த தயாரிப்பாளர் தான் இதற்கான விளக்கத்தை கொடுக்க வேண்டும்.

போட்டி போட்டு வசூலித்த அரண்மனை 4, மகாராஜா

Next Story

- Advertisement -