விஜய் சேதுபதியின் மகாராஜா OTT ரிலீஸ்..எந்த தேதியில்,எதுல பாக்கலாம் தெரியுமா?

Maharaja OTT release: விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான மகாராஜா படத்தின் OTT ரிலீஸ் தேதி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நல்ல படங்கள் என்று எதுவுமே வரவில்லை.

அரண்மனை 4 பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தாலும் அதற்கு முக்கிய காரணம் படம் ரிலீஸ் செய்யப்பட்ட காலகட்டம் மற்றும் குழந்தைகள் தான். அதை தாண்டி மனதில் உட்காரும் அளவுக்கான கதை அம்சத்தோடு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.

ரசிகர்களின் அந்த பெரிய இயக்கத்தை விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் தீர்த்து வைத்தது. பொதுவாக பெரிய ஹீரோக்களுக்கு 50வது படம் ஹிட் ஆகாது என்று இருந்த ரெகார்டையும் இந்த படம் மாற்றிவிட்டது. கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக விஜய் சேதுபதி சோலோ ஹீரோவாக நடித்த படம் எதுவுமே வெற்றி பெறவில்லை.

விஜய் சேதுபதிக்கு அடுத்து இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின், சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் மற்றும் கிஷோர் இயக்கத்தில் காந்தி டாக்ஸ் போன்ற படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன

மகாராஜா படத்தின் மூலம் மீண்டும் விஜய் சேதுபதி பார்முக்கு வந்திருக்கிறார். ஏற்கனவே படம் வெள்ளித்திரையில் வசூல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கும்போது, OTT ரிலீஸ் தேதியும் வெளியாகி இருக்கிறது.

மகாராஜா படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 20 கோடி. ஆனால் தியேட்டரில் மட்டுமே 80 கோடியை தாண்டி விட்டது. நடிகர் விஜய் சேதுபதியின் தற்போதைய சம்பளம் 20 கோடியாகும். அவர் சமீப காலமாக நிறைய படங்களுக்கு அட்வான்ஸ் மட்டுமே வாங்கிக் கொண்டு நடித்துக் கொடுத்துக் கொண்டிருப்பதாக ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

அதன்படி மகாராஜா லாபத்தில் இருந்து விஜய் சேதுபதிக்கு சம்பளம் கொடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது இந்த படத்தை நெட்ஃபிளிக்ஸ் வாங்கி இருக்கிறது. மேலும் வரும் ஜூலை 12ஆம் தேதி இந்த படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கிறது.

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் மீடியாவுக்கு வந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் கடந்த 2017 ஆம் ஆண்டு குரங்கு பொம்மை என்னும் படத்தை இயக்கி இருந்தார். அவருக்கு மகாராஜா படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்திருக்கிறது. நித்திலனின் அடுத்த பட அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

கெத்து காட்டிய விஜய்சேதுபதி

Next Story

- Advertisement -