1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த 5 படங்கள்.. பல தோல்விகளுக்குப் பின் உலகளவில் கவனத்தை ஈர்த்த பதான்

சினிமாவை பொறுத்த வரையிலும் ஒரு படத்தின் வெற்றி என்பது அந்தப் படத்தின் வசூலைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் நல்ல கதைக்களத்துடன் கூடிய படங்கள் ஆனது ரசிகர்களின் மத்தியில் அதிக கவனத்தை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் படத்திற்காக செய்யப்படும் செலவினை விட பல மடங்கு லாபம் பார்த்து விடுகின்றனர். அந்த வகையில் உலக அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த 5 படங்களை இங்கு காணலாம். 

தங்கல்: 2016 ஆம் ஆண்டு இயக்குனர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் குஸ்தி விளையாட்டை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தில் அமீர்கான், கிரண் ராவ், சித்தார்த் ரே கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளிவந்து. மாபெரும் வெற்றி பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸில் உலக அளவில் 2,024 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

Also Read: பாக்ஸ் ஆபீஸில் முதல் 2 இடத்தை பிடித்த தென்னிந்திய படங்கள்.. பின்னுக்குத் தள்ளப்பட்ட பாலிவுட் மூவி

பாகுபலி 2: இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த வரலாற்று திரைப்படம் ஆகும். இதில் பிரபாஸ் உடன்  ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 2015 இல் வெளியான முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அதன் இரண்டாம் பாகம் வெளியாகி உலக அளவில் 1,810 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளது.

ஆர்.ஆர்.ஆர்: 2022 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் ஆகும். இதில் தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ள ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் உலக அளவில் கவனத்தை ஈர்த்து 1,258 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் பெற்றுள்ளது.

Also Read: கேஜிஎஃப் 2, பாகுபலி 2 வசூலை முறியடித்த விக்ரம்.. திரையரங்கு உரிமையாளர் பேட்டி

கே ஜி எஃப் 2: இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அதிரடிக் கலந்த திரில்லர் திரைப்படம் ஆகும். 2018 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது. உலக அளவில் கே ஜி எஃப் 2 திரைப்படம் 1,250 கோடி வரை வசூல் பெற்றுள்ளது.

பதான்: இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் பதான். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் 1000 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் அதிக வசூல் செய்த படங்களை பின்னுக்கு தள்ளி பதான் திரைப்படம் முன்னிலை வகிக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

Also Read: ஏழே நாட்களில் பாகுபலியை தும்சம் செய்த கேஜிஎஃப் 2.. ராஜமவுலி கொஞ்சம் ஓரமா போங்க

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்