செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

சிவகார்த்திகேயனுக்கு வசூலை அள்ளிக் கொடுத்த 5 படங்கள்.. வெளிப்படையாக சொன்ன உதயநிதி

5 films that gave the collection to Sivakarthikeyan: பொதுவாக சிவகார்த்திகேயனின் படங்கள் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தான் இருக்கும். முக்கியமாக குழந்தைகளை கவரும் வகையில் காமெடி கலந்த நடிப்பை கொடுத்து விடுவார். அதனாலேயே இவருடைய படங்களை அனைவரும் விரும்பி தியேட்டர்களில் போய் பார்ப்பார்கள். அந்த வகையில் இவருடைய படங்கள் தொடர் வெற்றிகளை அடைந்திருக்கிறது. இதனால் இவருடைய கேரியரில் அதிக வசூலை கொடுத்த படங்களும் இருக்கிறது. அந்த படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

டான்: சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் டான். இப்படத்தின் கதையானது இன்ஜினியர் படிக்கும் சிவகார்த்திகேயனின் கல்லூரி கலாட்டா மற்றும் செண்டிமெண்ட் நடிப்பையும் கொடுத்திருப்பார். இப்படத்தை லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன் சேர்ந்து தயாரித்தது. அத்துடன் இப்படத்தை விநியோகம் செய்தது ரெட் ஜெயின்ட் நிறுவனம். அந்த வகையில் உதயநிதி வெளிப்படையாக இப்படத்தின் கலெக்ஷனை கூறியுள்ளார். கிட்டத்தட்ட இப்படம் 38 கோடி தமிழ்நாட்டில் மட்டும் வசூலை பெற்றதாக கூறியிருக்கிறார்.

டாக்டர்: நெல்சன் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், வினய் மற்றும் பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் முழுக்க முழுக்க காமெடி காட்சிகளையும், கிளைமாக்ஸ் இல் ஒரு கருத்துக்களை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாகவும் படம் எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் சேர்ந்து தயாரித்தார்கள். இப்படத்தின் வசூல் ஆனது 35 கோடியை பெற்றது.

Also read: பிப்ரவரி 9 ஓடிடியில் ரிலீஸாகும் 14 படங்கள்.. மீண்டும் மோதிக் கொள்ளும் தனுஷ், சிவகார்த்திகேயன்

அயலான்: ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி அயலான் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவகார்த்திகேயன், ராகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் கொடிய நோவா வாயுவை உருவாக்கும் ஒரு முரட்டு விஞ்ஞானியை தடுக்க வேற்றுக்கிரகவாசியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிப்பை கொடுத்திருப்பார். இப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் வசூல் ஆனது 30 கோடி லாபத்தை பெற்று கொடுத்திருக்கிறது.

மாவீரன்: மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த வருடம் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் மாவீரன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது தொட நடுங்கியாக இருக்கும் சிவகார்த்திகேயன், அநியாயம் ஏற்பட போகிறது என்று தெரிந்ததும் அவருக்கு மாவீரன் வந்து தெம்பு ஊட்டும் விதமாக கதை நகர்ந்து வரும். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ரெட் ஜெயின்ட் நிறுவனம் விநியோகம் செய்து இருக்கிறது. இப்படத்தின் வசூல் தமிழ்நாட்டில் மட்டும் 28 கோடி லாபத்தை பெற்று கொடுத்திருக்கிறது.

நம்ம வீட்டு பிள்ளை: இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் முழுக்க முழுக்க குடும்பத்தை மையமாக வைத்து சென்டிமென்ட் காட்சிகளை படமாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தை கலாநிதி மாறன் தயாரித்து ரெட் ஜெயின்ட் நிறுவனம் விநியோகம் செய்யப்பட்டது. இப்படத்தின் வசூல் 25 கோடி லாபத்தை கொடுத்திருக்கிறது.

Also read: வேற்று மொழி நடிகர்களை இங்கே வளர்த்துவிட்ட 5 படங்கள்.. சிவகார்த்திகேயன் காலை வாரி விட்ட ஆதி

- Advertisement -

Trending News